கனடாவில் வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாகாணங்கள்!

heatwave alert
heat wave alert canada

ஒன்ராறியோ, கியூபெக் மாகாணத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகளுக்கு வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ரொறன்ரோ, ஒட்டாவா மற்றும் மொன்றியல் ஆகிய நகரங்களை சுற்றியுள்ள பகுதிகளுக்கு வெப்ப எச்சரிக்கை கடுமையாக்கப்பட்டுள்ளது.

கனேடிய சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடுமையான வெப்பத்தை எதிர்கொள்ளும் பகுதியில் உள்ள மக்கள் அதிக நீரைப் பருக வேண்டும்.

தங்கள் வீடுகளை குளிர்ச்சியாக வைத்திருக்க திரைச்சீலைகள் மற்றும் திரைமறைப்பு மூலம் மறைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்பநிலை 34 செல்சியஸ் வரை உயரலாம் என எதிர்பார்க்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.