ஒன்ராறியோ மாகாணத்திற்குள் நுழையும் வாகனங்களுக்கு கட்டுப்பாடு – காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட உயர் அதிகாரம்!

doug_ford
After new modelling data showed the current wave could continue into summer if nothing changes

ஒன்டாரியோ மாகாணத்தில் அனைத்து மாணவர்களுக்கும் மெய்நிகர் வாயிலாக பாடங்களை கற்பிக்க அறிவிக்கப்பட்டுள்ளது.

Covid-19 வைரஸ் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து ஒன்டாரியோ பகுதியில் அதிகரித்துக்கொண்டே இருந்ததால் அந்த மாகாணத்தில் உள்ள பல்வேறு பாடசாலைகளும் அரசாங்க உத்தரவின்படி மூடப்பட்டது.

ஒன்ராரியோ மாகாணத்தில் covid-19 வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருப்பதால் நேரடி வகுப்புகள் நடத்தப் பட்ட சில பாடசாலைகளும் இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டு மெய்நிகர் வழியாக பாடங்களை கற்பிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

மாகாண அரசாங்கம் தொலைதொடர்பு கல்வியை நடத்துமாறு அறிவித்துள்ளது. மேலும் மாகாண அரசாங்கம் covid-19 பாதிப்பு எண்ணிக்கை கட்டுப்பாட்டுக்குள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

மேலும் மாகாணங்களுக்கு இடையேயான போக்குவரத்து கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

பொது சுகாதார விதி, ஒரு வாரத்தில் தொற்று பதிவாகியுள்ள எண்ணிக்கையின் சராசரி மற்றும் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை போன்றவை அனைத்தும் முறையாக  வெளியிட்டுள்ளது.

சனிக்கிழமை அன்று ஒன்றாரியோ மாகாண முதல்வர் போர்டு அவர்கள் விளையாட்டுத் திடல்கள் போன்றவை இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து காவல் துறையினருக்கு பல்வேறு அதிகாரங்களை முதல்வர் டாக் போர்ட் அவர்கள் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மாகாணங்களுக்கு இடையேயான போக்குவரத்து கட்டுப்பாட்டு கண்காணிப்பை காவல்துறையினரை மேலும் அதிகரித்துள்ளனர்.

பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் , வீட்டிலேயே தங்கி இருக்கும் விதியின் போது அவர்களை கட்டுப்படுத்துவதற்காக காவல் துறையினருக்கு பல்வேறு அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.