ஆயிரக்கணக்கான மின்விசிறிகளை திரும்ப பெறும் ஹெல்த் கனடா! பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

health-canada-recalls-hampton-bay-mara-54-inch-ceiling-fans-due-to-injury-hazard-
Health Canada has recalled more than 5,000 Hampton Bay Mara 54-inch ceiling fans after the company received 47 reports of the fan's blades detaching during use. (Photo: Health Canada).

இறக்கைகள் தளர்வடைந்து ஆபத்தை ஏற்படுத்துகிறது என்பதாலும், பயன்பாட்டின் போது முரட்டுத்தனமாக செல்படுகிறது என்பதாலும் ஹெல்த் கனடா  5,000 மின்விசிறிகளை திரும்பப்பெறுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த வகை மின்விசிறிகளால் கனடாவில் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என்றாலும், அமெரிக்காவில் இறக்கைகள் தளர்வாக வருவதாக 47 புகார்கள் வந்துள்ளன.

மின்விசிறியினால் மேற்கூரை சேதமடைந்தது பற்றிய நான்கு அறிக்கைகள் வெளியாகியுள்ளது. மேலும் இறக்கைகள் மக்களை தாக்கிய இரண்டு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வெள்ளை நிற மின்விசிறிக்கு அடியில் 71918 மற்றும் கருப்பு நிற மின்விசிறிக்கு அடியில்  71919 என்ற எண் குறியீடுகள் ஸ்டிக்கர் வடிவில் ஒட்டப்பட்டிருப்பதை  காணலாம்.

திரும்பப் பெறுதலின் படி, இந்த மின்விசிறியை ஹோம் டிப்போ கனடா இங்க் வினியோகித்தது. 5,091 கனடாவில் விற்கப்பட்டுள்ளன. 84,828 அமெரிக்காவில் விற்கப்பட்டன.

இந்தத் திரும்பப்பெறுதலில் மேட் ஒயிட் மற்றும் மேட் பிளாக் ஆகியவற்றில் Hampton Bay Mara 54-inch மின்விசிறி அடங்கும்.

மே மற்றும் அக்டோபர் 2020க்கு இடையில் இந்த மின்விசிறிகளில் ஒன்றை நீங்கள் வாங்கியிருந்தால், அது திரும்ப வாங்கிய இடத்திலேயே ஒப்படைக்கலாம்.

உங்கள் வீட்டுக் கூரையில் இந்த மின் விசிறி இருந்தால், நீங்கள் உடனடியாக விசிறியைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, உங்கள் வீட்டு விசிறியை எவ்வாறு பரிசோதிப்பது என்பதற்கான வழிமுறைகளுக்கு கிங் ஆஃப் ஃபேன்ஸ் நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளுங்கள்.

ஒரு சிக்கல் அடையாளம் காணப்பட்டால், கிங் ஆஃப் ஃபான்ஸ் நிறுவனம் மாற்றீடு அல்லது பணத்தைத் திருப்பித் தரும் என்று ஹெல்த் கனடா கூறுகிறது.

இதையும் படியுங்க: கனடாவில் கொரோனா மிகத்தீவிரம்! 15000 ஆயிரம் உயிர்பலிகளை கடந்த சோகம்!

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.