ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை பயன்படுத்த வேண்டாம் – கனடா எச்சரிக்கை

COVID-19 in Canada: கொரோனா வைரஸால் உலகளவில் இதுவரை 2,995,043 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்புக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை மத்திய அரசு பரிந்துரை செய்தது.

கோவிட்- 19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை பரிந்துரை செய்வதாக அமெரிக்கா அதிபர் டிரம்ப் முதலில் அறிவித்தார். இது மலேரியாவுக்கு சிகிச்சை அளிக்க பயன்படும் மருந்து என்பது குறிப்பிடத்தக்கது.

Canada Tamil News: சீனாவின் 1 மில்லியன் தரமற்ற மாஸ்குகளை நிராகரித்த கனடா

இந்த மருந்துகளால் கொரோனா நோயாளிகளுக்கு கடும் பக்க விளைவுகள் ஏற்படும் என அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை எச்சரித்தது. நோயாளியின் உடல்நலத்தை நன்கு பரிசோதனை செய்த பிறகு தான் இதுபோன்ற மருந்துகளை அவர்களுக்கு அளிக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.

இந்நிலையில் மலேரியா தடுப்பு மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மற்றும் குளோரோகுயினை கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்த வேண்டாம் என கனடா சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த இரண்டு மருந்துகளால் கடும் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா-கனடா எல்லைகள் மேலும் 30 நாட்களுக்கு மூடல்…. இரு நாடுகளும் அறிவிப்பு

தலைச்சுற்றல், மயக்கம், வலிப்பு, கல்லீரல் அல்லது சிறுநீரக பிரச்சினைகள் மற்றும் அபாயகரமான ஒழுங்கற்ற இதய துடிப்புக்கு வழிவகுக்கும் என்று கனடா தெரிவித்துள்ளது. இந்த மருந்துகளை உட்கொண்ட பிறகு இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அழைக்குமாறு கனடா அறிவுறுத்தியுள்ளது.