இனி கனடாவிற்கு எந்த தடைகளும் இல்லை – ஹெல்த் கனடா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

corona
Canada Corona Vaccine

உலக நாடுகள் அனைத்தும் கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி மருந்துகளை விநியோகிப்பதில் தற்பொழுது வேகம் காட்டி வருகின்றன.

இந்நிலையில் கனடா தடுப்பூசி மருந்துகளை பெறுவதில் சில இடையூறுகளை சந்தித்து வந்துள்ளது. அமெரிக்க நிறுவனமான மாடர்னா தடுப்பூசி பெற்றுக்கொள்வதில் கனடா அரசாங்கம் தொடர்ந்து இடையூறுகளை சந்தித்து வருகிறது.

அதனால் மேலும் சில தடுப்பூசி மருந்துகளை பிற நாடுகளிடமிருந்து பெற்றுக்கொள்ள கனடிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த வரிசையில் அஸ்ட்ரா ஜெனி கா தொற்று தடுப்பூசி பெறுவதற்கான மதிப்பாய்வு நடத்தப்பட்டு வருகிறது.

இந்த தடுப்பூசிக்கான மதிப்பாய்வு இறுதிக் கட்டங்களில் உள்ளதாக ஹெல்த் கனடா தெரிவித்திருக்கிறது.

ஹெல்த் கனடாவின் மூத்த மருத்துவ ஆலோசகர் தலைமை வைத்தியர் இசுக்கிய ஷர்மா அவர்கள் “ஐரோப்பிய மருந்துகள் நிறுவனத்தோடு இணைந்து நடத்திய ஆய்வில் இறுதி செய்ய மேலும் சில நாட்கள் ஆகும் “என கூறியுள்ளார்.

அக்டோபர் முதல் தேதி அன்று சமர்ப்பிக்கப்பட்ட  அஸ்ட்ரோ செனிகா இன் மறுபரிசீலனை செய்துவருவதாக ஹெல்த் கனடா ஜனவரி இறுதியில்  தகவல்கள் வெளியிட்டுள்ளது.

மேலும் டிசம்பர் 9ஆம் தேதியன்று ஹெல்த் கனடா பைசர் பயோடெக் தடுப்பூசியை அங்கீகரித்தது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து டிசம்பர் 23ஆம் தேதி அன்று மாடர்னா தடுப்பூசியை ஹெல்த் கனடா அங்கீகரித்துள்ளது. எனவே மார்ச் மாத இறுதிக்குள் கனடிய மக்களுக்கு போதுமான தடுப்பூசி மருந்துகளை பெற்று தன்னகத்தே சேமித்து வைத்துக் கொள்ளும் என்பது உறுதியாகிறது.

தடுப்பூசி மருந்துகள் விநியோகிப்பதில் இனி கனடாவிற்கு எந்த தடைகளும் இருக்கப்போவதில்லை.

இதையும் படியுங்க: கனடாவில் CERB திட்டத்தில் இப்படியொரு மோசடி நடந்துள்ளதா? வெளிச்சத்துக்கு வந்த உண்மை!