இளம் கனடியர்களுக்கு வீட்டு வசதி – தேர்தல் பிரச்சாரத்தில் ஜஸ்டின் ட்ரூடோ

hongkong
china diplomat statement to canada about hongkong issue

கனடாவில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களும் தேர்தல் பிரச்சாரத்தில் களமிறங்கியுள்ளனர். தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்களுக்கு தேவையான பல்வேறு திட்டங்களை கொண்டு வருவதாகவும் தலைவர்கள் வாக்குறுதி அளிக்கின்றனர். லிபரல் கட்சியின் தலைவர் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ செவ்வாய்க்கிழமை ஹாமில்டன் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் உரையாற்றினார்.

சுமார் ஒரு பில்லியன் டாலர் கடன் மற்றும் மானியங்கள் மூலம் வாடகை வீட்டில் குடியிருக்கும் மக்களை வீட்டு உரிமையாளர்கள் ஆக மாற்ற உதவும் என்று பிரச்சாரத்தின் போது தெரிவித்தார்.

லிபரல் கட்சிகளின் திட்டம் வீட்டு வரி இல்லாத சேமிப்பு கணக்கை இளம் கனடியர்களுக்கு அறிமுகப்படுத்துவதன் மூலம் குறைந்த கட்டணத்தை விரைவில் செலுத்த உதவும் என்று கூறப்பட்டுள்ளது.

சுமார் 40000 டாலர்கள் வரை இளம் கனடியர்கள் தங்களது முதல் வீட்டிற்கு சேமிக்க அனுமதி அளிக்கப்படும். திரும்பச் செலுத்த வேண்டிய அவசியமின்றி, அவர்கள் வாங்குவதற்கு வரி இல்லாமல் பெற்றுக்கொள்ளலாம் .

100,000 புதிய நடுத்தர வர்க்க வீடுகளை 2024 -2025 ம் ஆண்டிற்குள் பெரிய நகரங்கள் வீட்டுத் திட்டங்களை விரைவுபடுத்த உதவும் வகையில் 4 பில்லியன் டாலர்கள் கிடைக்கச்செய்யும் வீட்டு வசதி திட்டம் இவற்றில் அடங்கும் என்று ட்ரூடோ அறிவித்தார். தேர்தல் பிரச்சாரத்தில் ஜஸ்டின் ட்ரூடோ அறிவிப்பின் போது மக்களிடையே பல்வேறு கூச்சல் மற்றும் சத்தம் கேட்டது.

“கடந்த பல ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான குடும்பங்கள் புதிய வீடுகளை பெற்றுள்ளன. மக்கள் வாழ்வதற்கு பாதுகாப்பான இடம் உள்ளது ” என்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார் . முந்தைய கன்சர்வேட்டிவ் அரசாங்கம் கனடியர்கள் வீட்டு வசதிக்கு உதவத் தவறி விட்டதாகவும் குற்றம் சாட்டினார்