பல்கலைக்கழக மாணவருக்கு நேர்ந்த சோகம் – பரிதாபமாக உயிரிழந்த 18 வயது இளைஞர்

guelph university student dead

கனடாவில் கல்லூரி மாணவர் ஒருவர் விபத்தில் உயிரிழந்தார்.உயிரிழந்த மாணவர் டொரன்டோ நகரத்தைச் சேர்ந்தவர் ஆவார். மாணவர் மரணம் அடைந்ததை தொடர்ந்து அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் ஒரு நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

18 வயது உடைய கீன் மெக்கன்சி என்ற மாணவர் Guelph பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் இருபத்தி ஆறாம் தேதி சாலையில் ஏற்பட்ட வாகன விபத்தில் சாலையின் ஓரத்தில் சென்றுகொண்டிருந்த பாதசாரிகள் 8 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்களில் கல்லூரி மாணவரான மெக்கன்சியும் ஒருவராவார்.விபத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சமீபத்தில் சிகிச்சை பலனின்றி மெக்கன்சி உயிரிழந்தார்.

மெக்கன்சியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர்களுக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அவர்களின் உடல்நலனை பாதுகாப்பாக மீட்டெடுக்க முறையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் காவல்துறையினர் விபத்து ஏற்பட்ட இடம் மற்றும் காரணம் போன்றவற்றை பற்றி தீவிர புலன் விசாரணையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இளம் வயதில் பரிதாபகரமாக உயிரிழந்த மெக்கன்சி நினைவாக அவருக்குத் துக்கம் அனுசரிக்கும் வகையில் அவர் பயின்ற பல்கலைகழகம் வளாகத்தில் உள்ள கொடிகள் கீழே இறக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும் அவர் நினைவாக அஞ்சலி நிகழ்ச்சியும் நடைபெறும் என்று தெரிவித்தது.