ஆசிய கனடியர்களுக்கு எதிராக இனவெறி தாக்குதல் – மனம் திறந்த பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ!

trudeau
Generations of Asian Canadians helped build Canada

ஆசிய கண்டத்தில் கனடியர்கள் பெரும்பான்மையானோர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஆசிய கனடியர்களுக்கு எதிராக ஆசியாவில் பல்வேறு இனவெறி தாக்குதலும் வன்முறைகளும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவர்கள் கடந்த ஆண்டு ஆசிய கனடியர்களுக்கு எதிரான இனவெறி தாக்குதல் அதிகரித்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

அட்லாண்டாவில் வாழ்ந்து வரும் ஆசிய பெண்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தை அடுத்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவர்கள் இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

கனடாவில் மக்களிடையே பாரபட்சம் இன்றி அனைவரும் சமமாக கருதப்படுவர்.கனடா முழுவதும் அனைவரும் சமம் என்ற சிறந்த எண்ணத்தை மேம்படுத்த வேண்டும் என்றும் ஜஸ்டின் ட்ரூடோ அவர்கள் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் மேரி அவர்கள் ட்விட்டரில் கருத்தினை பதிவிட்டுள்ளார்.

அதில் ஆசிய கனேடியர்களுக்கு உடனடியாக உங்கள் உதவி தேவை. covid-19 தடுப்பூசி மருந்துகள் எங்களிடம் உள்ளது. ஆனால் இனவெறி தாக்குதலுக்கு எதிரான தடுப்பூசி மருந்துகள் எங்களிடம் இல்லை என்று கூறியுள்ளார். இவர் பதிவிட்ட இந்த கருத்தினை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவர்கள் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.