covid-19 நான்காவது அலையின் அதிரடி ஆரம்பம் – தடுப்பூசி போடாதவர்களுக்கு எச்சரிக்கை

Canada

Covid-19 தொற்றின் நான்காவது அலை தொடக்க நிலையில் உள்ளது. ஒன்ராரியோ மாகாணத்தில் வியாழக்கிழமை 865 covid-19 வழக்குகள் பதிவாகியுள்ளன. Covid-19 வைரஸ் தொற்றால் பாதிப்படைந்து 14 பேர் மரணமடைந்துள்ளனர்.

கடந்த ஜூன் மாதத்தில் ஆரம்ப காலத்தில் covid-19 வழக்கு எண்ணிக்கை அதிகரித்தது. தற்பொழுது மாகாணம் கண்காணிக்க தொடங்கியதிலிருந்து தடுப்பூசி போட்டுக் கொள்ளாத மக்களிடையே அதிக எண்ணிக்கையிலான covid-19 தொற்று வழக்குகள் பதிவாகியுள்ளன.

ஒன்ராரியோ மாகாணத்தில் கடந்த ஜூன் மாதம் நான்காம் தேதி 914 covid-19 வழக்குகள் உச்சநிலையில் பதிவாகியிருந்தன. வியாழக்கிழமை ஜூன் மாத எண்ணிக்கையைவிட அதிகரித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

வியாழக்கிழமை பதிவாகியுள்ள வழக்குகளில் 62% பேர் covid-19 தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் ஆவர். சுமார் 540 பேர் தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் covid-19 வைரஸ் தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பகுதி அளவு தடுப்பூசி பெற்றுக்கொண்ட மற்றும் முழுமையாக தடுப்பூசி போடப்படாதவர்கள் 692 பேர் covid-19 வைரஸ் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. 80 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போடப்படாத நிலையில் covid-19 வைரஸ் தொற்றினால் பாதிப்படைந்துள்ளனர்.

இரண்டு கட்ட தடுப்பூசி மருந்துகளையும் பெற்றுக்கொண்டு தடுப்பூசி போடப்பட்ட நிலையில் 73 பேர் covid-19 வைரஸ் தொற்றினால் பாதிப்படைந்துள்ளனர். இது 20 சதவீதம் ஆகும்.

தடுப்பூசி போடப்படாத மற்றும் பகுதி அளவு தடுப்பூசி போட்டுக் கொண்ட நபர்கள் 33% covid-19 வைரஸ் தொற்றினால் பாதிப்படைந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சகம் கூறுகிறது. நான்காவது அலையின் ஆரம்ப கட்டமாக கனடாவின் பல்வேறு மாகாணங்களிலும் covid-19 வழக்குகள் அதிகரிக்கின்றன.