உடல்கள் இந்தியாவிற்கு கொண்டு வர படாது – எல்லையில் உயிரிழந்தவர்களுக்கு கனடாவில் இறுதிச்சடங்கு நடைபெறும்

கனடா – அமெரிக்கா எல்லையில் கடந்த வாரம் 4 சடலங்கள் உறைபனியில் மீட்டெடுக்கப்பட்டன.எல்லைக்கு அருகிலுள்ள மணிதொபா மாகாணத்தின் எமர்சன் நகரத்தில் எல்லையை கடக்க முயன்ற போது ஒரு குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பனியில் உறைந்து உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

39 வயதான கணவன் ஜெகதீஷ் பல்தேவ்பாய் படேல், மனைவி வைசாலி பென் 37,மற்றும் அவர்களது குழந்தைகளான விஹாங்கி 11,மற்றும் 3 வயதான தர்மிக் ஆகியோரின் அடையாளங்களை அதிகாரிகள் உறுதி செய்தனர் எல்லையில் நிலவிய கடுமையான குளிர் காரணமாக குடும்பம் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.

ஜெகதீஷின் உறவினர் ஒருவர் ” இந்தத் துயரமான சம்பவம் எங்கள் குடும்பத்தில் நிகழ்ந்துள்ளது. மொத்த குடும்பமும் துக்கத்தில் உள்ளது ” என்று வீட்டிற்கு வெளியே குவிந்த செய்தியாளர்களிடம் கூறினார். மேலும் உயிரிழந்தவர்களின் சடலங்கள் இந்தியாவிலுள்ள அவர்களது வீட்டிற்கு விமானத்தில் கொண்டு வரப்படாது என்றும் கூறினார்.

உறவினர்கள் பேசும் நிலையில் இல்லை மேலும் அவர்கள் பேச தயாராக இல்லை என்று வீடியோவில் தெரிவித்தார்.உடல்களில் இந்தியாவிற்கு கொண்டு வரப்படாது என்றும் கனடாவிலேயே இறுதி சடங்குகள் செய்யப்படும் என்றும் கூறினார்.

கடும் பனியில் உயிரிழந்த குடும்பமானது சர்வதேச எல்லையைத் தாண்டி அமெரிக்காவுக்கு செல்ல முயன்ற குழுவின் ஒரு பகுதியாக கூறப்படுகிறது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தை கண்டுபிடிப்பதற்கு சற்று முன்பு ஏழு இந்தியர்களை அமெரிக்க அதிகாரிகள் எல்லையில் தடுத்து வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.