NDP கட்சியின் முன்னாள் தலைவர் அலெக்சா வுக்கு நேர்ந்தது என்ன? – 77 வயதுடைய பெண்மணி காலமானார்

Drugs Canada
One quarter of prescription drugs in Canada may be in short supply

கனடாவின் முன்னாள் கூட்டாட்சி NDP கட்சியின் தலைவர் அலெக்சா மெக்டோனாஃப் சனிக்கிழமை அன்று உடல்நலக்குறைவால் காலமானார். அரசியலில் பெண்களுக்கு முன்னோடியாக நின்று வழிவகுத்த அலெக்சா ஹாலிபாக்ஸில் அவரது 77 வயதில் மரணமடைந்துள்ளார்.

நீண்ட நாட்களாக அல்சீமர் நோயுடன் போராடிக்கொண்டிருந்த அலெக்சா உயிரிழந்ததை அவரது குடும்பத்தினர் சனிக்கிழமை உறுதிப்படுத்தினர்.

புதிய ஜனநாயக கட்சியின் தலைவராக நோவா ஸ்கோஷியாவில் 1980இல் தேர்ந்தெடுக்கப்பட்ட போது கனடாவில் ஒரு மிகப்பெரிய கட்சிக்கு தலைமை தாங்கிய முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார். மேலும் அலெக்சா 1995ஆம் ஆண்டு கூட்டாட்சி NDP கட்சியின் தலைவராக பொறுப்பேற்று 2002 வரை கட்சியின் உயர் பதவியில் பணியாற்றினார்.

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உட்பட பல்வேறு கட்சித் தலைவர்களும் அலெக்சாவின் தனித்துவமான ஆளுமை மற்றும் நிர்வாக தன்மை குறித்து புகழ்ந்து பேசினர்.மேலும் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். கனடிய மக்கள் அலெக்சாவை தவறவிடுவதாகவும் பலரும் தெரிவித்து வருகின்றனர்.

1974 ஆம் ஆண்டு என்டிபி கட்சியில் சேர்ந்த அலெக்சா ஒரு சிறந்த சமூக சேவகர் ஆவார். 1994 ஆம் ஆண்டு மாகாண தலைவர் பதவியை அலெக்சா ராஜினாமா செய்தார். அதன் பின்னர் கூட்டாட்சி அரசியலுக்குள் நுழைந்தார்.

1995-ல் தேசிய கட்சியின் அரசியலில் உயர் பதவிக்கு சவாலாக இருந்தார். நூற்றாண்டுகளுக்கும் மேலாக நோவா ஸ்கோஷியாவில் இருந்த அரசியலின் அச்சை உடைத்த பெருமை அலெக்சாவை சேரும்