7,500க்கும் மேற்பட்டோர் கனடாவிற்குள் ஊடுருவ முயற்சி! பயணத் தடையை மீறி என்ன நடத்து எல்லையில்.?

கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து கனடா பயணத் தடை விதித்துள்ள நிலையில், தடையை மீறி 7,500க்கும் மேற்பட்ட அந்நிய நாட்டினர் கனடாவிற்குள் நுழைய முற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முயற்சி மேற்கொண்டவர்களில் பெரும்பாலானோர் அமெரிக்கர்கள் என தெரியவந்த நிலையில், கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக திருப்பி அனுப்பப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோதமாக நுழைய முயற்சி செய்தவர்கள், பொழுதுபோக்கு, பொருள் வாங்கல் போன்ற அத்தியாவசியமற்ற நோக்கங்களுக்காக வந்ததாக கூறப்படுகின்றது.

கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் ஜூன் 16 ஆம் திகதி வரை  7,639 வெளிநாட்டினர் கனடாவிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது. இதில் 87 சதவீதம் அமெரிக்கர்கள் சொந்த நாட்டுக்கே திருப்பி  அனுப்பப்பட்டுள்ளனர்.

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

Facebook : https://www.facebook.com/tamilmicsetcanada/

Twitter : https://twitter.com/canadatms