ஐந்து கட்சியின் தலைவர்களும் விவாதத்தில் களமிறங்கினர் – கனடா தேர்தல் 2021

party leaders

கனடாவில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 20ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் வெற்றி என்னும் இலக்கை அடைய தேர்தல் பிரச்சாரத்தில் கட்சியின் தலைவர்கள் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களையும் அறிவித்து வருகின்றனர்.

தேர்தலுக்கு முன்பு ஆங்கில மொழி விவாதம் மற்றும் பிரெஞ்சு மொழி விவாதம் கட்சியின் தலைவர்களிடையே நடைபெறும். தேர்தலுக்கு முன்பே கனடாவின் 5 கட்சி தலைவர்களும் பிரச்சாரத்தில் ஆங்கில மொழி விவாதத்தில் ஈடுபட்டனர்.

வியாழக்கிழமை மாலை நடைபெற்ற விவாதத்தில் காலநிலை, மலிவு ,covid-19 நடவடிக்கைகள், வழிநடத்துதல் மற்றும் நல்லிணக்கம் போன்ற தலைப்புகள் உள்ளடங்கி இருந்தது. கேட்டிநோவில் உள்ள தேசிய வரலாற்று அருங்காட்சியகத்தில் விவாதம் ஆனது நடைபெற்றது.

கனடாவின் ஐந்து கட்சியின் தலைவர்களும் கடந்த புதன்கிழமை பிரெஞ்சு மொழி விவாதத்தில் ஈடுபட்டனர். விவாதத்தின்போது நாட்டின் பொருளாதார நிலை மற்றும் சுகாதார மேம்பாடு போன்றவை விவாதத்தின் முக்கிய உரையாடலாக இருந்தது.

அருங்காட்சியகத்தில் நடைபெற்ற விவாதத்தில் ஐந்து கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் விவாதம் செய்வதற்கு களமிறங்கினர்.கனடாவின் தற்போதைய பிரதமர் மற்றும் லிபரல் கட்சியின் தலைவர் ஜஸ்டின் ட்ரூடோ, புதிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜக்மீட் சிங் ,கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் எரின் டூ ஓல் , பசுமை கட்சியின் தலைவர் அனேமி பால் மற்றும் தொகுதியின் கியூபெக்கோயிஸ் கட்சியின் தலைவர் யவ்ஸ்- பிரான்கோயிஸ் பிளான்செட் போன்ற 5 கட்சித் தலைவர்களும் விவாதத்தில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கதாகும்.

5 கட்சி தலைவர்களின் விவாதங்களை அங்கஸ் ரீட் நிறுவனத்தின் தலைவர் ஷேச்சி குர்ள் நிர்வகித்தார். விவாதங்களின் சிறப்பம்சமான கருத்துக்கள் மறுபரிசீலனைக்கு எடுத்துச் செல்வதற்கான வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன.