கனடிய வரலாற்றில் முதன்முறையாக அவசரநிலையை அறிவித்த பிரதமர் – 5 ஆண்டு சிறை தண்டனையும் அபராதமும்

justintrudeau

கனடாவின் தலைநகர் ஒட்டாவா நகரத்தை அதிரச் செய்த covid-19 ஆணைக்கு எதிரான லாரி ஓட்டுநர்களின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. போராட்டக்காரர்களின் சட்டவிரோதமான நடவடிக்கைகளையும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

போராட்டத்திற்கு குழந்தைகளை கொண்டுவருவது மற்றும் முக்கிய எல்லைகளை மூடுவது போன்ற முறையற்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் போராட்டக்காரர்களுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ஐந்தாயிரம் கனடியன் டாலர்கள் வரை அபராதம் விதிக்கப்படும் .

நடைபெற்றுவரும் போராட்டங்களில் நேரடியாக பங்கேற்பது மற்றும் எரிபொருள் அல்லது உணவு போன்ற உதவிகளை வழங்குவது போன்ற புதிய சட்டங்களை மீறும் எவருக்கும் இந்த தண்டனை பொருந்தும்..கனடிய வரலாற்றில் முதன்முறையாக பிரதம மந்திரி ஜஸ்டின் ட்ரூடோ திங்கள்கிழமை இந்த சட்டத்தை செயல்படுத்தினார்.

கனடாவில் இந்த சட்டத்தை செயல்படுத்துவதற்கான முடிவு எளிதில் எடுக்கப்படவில்லை என்று அட்டர்னி ஜெனரல் டேவிட் செவ்வாய் அன்று தெரிவித்தார்.எதிர்ப்பாளர்களால் நடத்தப்படும் போராட்டங்கள் முற்றுகைகள் அரசாங்கத்தைக் கவிழ்க்க ஒரு அமைப்பினால் உந்தப்பட்ட வை என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் மார்கோ தெரிவித்தார்.

போராட்டத்தில் குழந்தைகள் இருப்பது சட்டத்தை அமல்படுத்துவதில் அதிகாரிகளுக்கு கடினமாக இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர். எதிர்ப்பாளர்களுடன் ஏதேனும் மோதல்கள் ஏற்பட்டால் குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று கவலை கொள்கின்றனர் .
அவசரகால சட்டத்தை இயல்பாக்குவது ஜனநாயகம் மற்றும் சிவில் உரிமைகளை அச்சுறுத்துவதாக கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன