தீயணைப்பு வீரர்களால் ரத்து செய்யப்பட்ட விமானங்கள் – பிரச்சினைகளை தீர்ப்பதற்கு வரவழைக்கப்பட்ட நடுவர்

airport

விமான நிலையத்தில் தீயணைப்பு வீரர்கள் பிரச்சனையால் பயணிகள் விமானங்கள் தரை இறங்கவும் புறப்படவும் தடை ஏற்பட்டது. செயின்ட் ஜான்ஸ் பன்னாட்டு விமான நிலையம் புதன்கிழமை காலை தீயணைப்பு அரங்கில் பணியாளர்கள் பிரச்சனையால் பயணிகளை ஏற்றிய விமானங்கள் புறப்படவும் தரையிறங்கவும் தடை பட்டதை அடுத்து வழக்கம் போல் இயங்க தொடங்கியது.

செயின்ட் ஜான்ஸ் சர்வதேச விமான நிலைய ஆணையம் புதன்கிழமை காலை 8 மணி முதல் வழக்கம்போல் பணிகளை மீண்டும் தொடங்கியது. இருப்பினும் நிரந்தரமான தீர்வு இதுவல்ல என்று கூறப்பட்டுள்ளது.

விமான நிலையத்தில் பணியமர்த்தப்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஒன்பது பேரில் ஆறு பேர் விடுப்பில் சென்றுள்ளனர். பயணிகள் விமானம் புறப்படுவதற்கும் தரையிறங்குவதற்கும் தடைப்பட்டதற்கு தீயணைப்பு வீரர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கம் விமானநிலைய நிர்வாகத்தை குற்றம் சாட்டியுள்ளது.

விமானநிலையத்தில் ஊழியர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதால் விமான நிலையத்தில் பெரும்பாலான வணிக பயணிகள் சேவை செவ்வாய்க்கிழமை நிறுத்தப்பட்டது. இதன் விளைவாக 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.

விமான நிலைய அதிகாரிகளுக்கும் தீயணைப்பு வீரர்களுக்கும் இடையிலான பிரச்சனைகளை தீர்க்க ஒரு நடுவர் வரவழைக்கப்பட்டதாக மத்திய தொழிலாளர் அமைச்சர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். விமான நிலையத்தின் செயல்பாடுகள் புதன்கிழமை தற்காலிகமாக மீண்டும் செயல்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.