இனி அதற்கு இடமே இல்லை! கனடாவில் தீ விரவாத குழுவாக அறிவிக்கப்படவுள்ள அமைப்பு!

The Proud Boys
The Proud Boys Gang

கனடாவின் புதிய ஜனநாயக கட்சியின் தலைவர் (NDP) ஜக்மத் சிங் “The Proud Boys” அமைப்பை தடைசெய்து, பயங்கரவாதக் குழுவாக பட்டியலிட வேண்டும் என்று மனுவின் மூலம் கோரியுள்ளார்.

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அரசாங்கம் இந்த நடவடிக்கைக்கு உறுதியளிக்க மறுத்துவிட்டதாகவும், எனவே, பொதுமக்களின் ஆதரவைக் கேட்கிறேன் என்றும் சிங் ட்விட்டரில் எழுதினார்.

அந்த அமைப்பானது, வெள்ளை மேலாதிக்கக் கருத்துக்களை ஊக்குவிக்கும் வலதுசாரி தீவிரவாதக் குழு என்று ஜக்மீத் சிங்கின் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“The Proud Boys” உறுப்பினர்கள் அமெரிக்க வெள்ளை மாளிகை மீது தாக்குதலுக்கு வழிவகுத்தபோது கொடிய ஆயுதங்களுடன் கூடிய ஒரு குழுவில் சேர்ந்தனர்.

இது உள்நாட்டுப் பயங்கரவாதத்தின் செயல் என்றும் சிங் கூறியுள்ளார். அந்த அமைப்பின் நிறுவனர் கனடியர் என்று அவர் தொடர்ந்து கூறுகிறார்.

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அரசாங்கத்திடம் அந்த அமைப்பை உடனடியாகத் தடைசெய்து அறிவிக்கக் கோருமாறு பொதுமக்களிடம் ஜக்மத் சிங் கேட்டுக்கொள்கிறார்.

இந்த நிலையில் கனடாவின் பொது பாதுகாப்பு அமைச்சர் பில் பிளேர், அங்கீகரிக்கப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் “The Proud Boys” அமைப்பை சேர்ப்பது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக தெரிவித்தார்.

“The Proud Boys” போன்ற குழுக்கள், கருத்தியல் ரீதியாக வன்முறையை ஊக்கமளிக்கும் தீவிரவாதிகள் குறித்து நாங்கள் மிகவும் கவனமாக இருக்கிறோம் என்று பிளேர் கூறினார்.

இந்த நடவடிக்கை கனடாவிற்கு அச்சுறுத்தலாகக் கருதப்படும். பிற தீவிரவாத அமைப்புகளான அல்கொய்தா, போகோ ஹராம், தலிபான் மற்றும் பிறருடன் இதையும் சேர்க்கும்.

மத்திய அரசு அவர்களைப் பற்றிய உளவுத்துறை தகவல்களை தொடர்ந்து சேகரித்து வருவதாக அவர் உறுதியளித்தார்.

இதையும் படியுங்க: இனி மக்கள் தாராளமாக குடியேறலாம்! கனடாவின் முடிவால் உலக நாடுகள் மகிழ்ச்சி!

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.