போலியான சோதனை முடிவுகளை காட்டி கனடா வர நினைத்தால் ஆயிரக்கணக்கான டாலர் அபராதம்!

SaNOtize
A Vancouver-based company is making an anti-COVID-19 nasal spray that will soon be tested in a clinical trial in the United Kingdom – Jan 11, 2021 Leave A Comment

டொரன்டோ, பில், மற்றும் பிராந்திய பகுதிகளில் பொது முடக்க கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படுமா என்ற அறிவிப்பு நாளை மாலை வெளியாகும் என்று தகவல்கள் கூறுகின்றன.

டொரன்டோ மற்றும் பீல் போன்ற பகுதிகளில் அமலில் இருக்கின்ற கூட்டு நடவடிக்கையை எதிர்வரும் 9ஆம் தேதி வரை நீட்டிக்க மாகான அரசாங்கத்திடம் பரிந்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த பரிந்துரையை தனது அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் என முதல்வர் டக் போடு தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், போலியான சோதனை முடிவுகளை வழங்கிய இரண்டு விமான பயணிகளுக்கு சுமார் 17 ஆயிரம் டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.’

இரண்டு விமான பயணிகளும் ட்ரான்ஸ்போர்ட் கனடா நிறுவனத்திற்கு அபராதம் வழங்க வேண்டும்.

இவர்கள் இருவரும் கனடாவிற்கு திரும்பும் முன்னரே பொய்யான முடிவு வழங்கியதாக குற்றம் பதிவாகியுள்ளது.

தவறான அல்லது போலியான சோதனை முடிவுகளை வழங்கியதாகவும் தனது உடல்நிலை குறித்த தவறான தகவலை வழங்கியதாகவும் அபராதம் விதிக்கப்பட்டது.

இரண்டு பேர் முறையே பத்தாயிரம் டாலரும் 7000 டாலரும் விதிக்கப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் வைரஸ் தொற்று இருப்பதாக பதிவுசெய்த பிறகு, இருவரும் ஜனவரி 23 ஆம் தேதி அன்று மெக்சிகோவில் இருந்து மொன்றியலுக்கு பயணித்தவர் டிரான்ஸ்போர்ட் கனடா குறிப்பிட்டுள்ளது.

கனடிய விமான விதிப்படி வருகின்ற பயணிகள் பயணத்திற்கு 72 மணி நேரங்களுக்கு முன்னரேயே எதிர்மறையான covid-19 சோதனை முடிவுகளை சமர்ப்பிக்க வேண்டும்.

விதிகளை மீறியதால் இருவரும் அபராதம் வழங்கப்பட வேண்டும் என்று அரசாங்கம் விதித்துள்ளது.

இதையும் படியுங்க: குறையாத தொற்று தாக்கம்! 4 கனடிய விமான நிலையங்களுக்கான சேவையை இரத்து செய்த நிறுவனம்!