முகக்கவசம் அணிய வேண்டுமா ?- கனடாவில் கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு ஆலோசனை

3M N95 Mask

கனடாவில் Covid-19 வழக்குகளின் எண்ணிக்கை படிப்படியாக வீழ்ச்சியை நோக்கி செல்கின்ற நிலையில் பொது சுகாதார கட்டுப்பாடுகளும் படிப்படியாக நீக்கப்படுகின்றன. முக கவசம் அணியும் கட்டுப்பாடானது படிப்படியாக இல்லாமல் வைரஸ் தொற்றிலிருந்து முழுமையான பாதுகாப்பை உணரும்போது பெரும்பாலான இடங்களில் ஒரே நேரத்தில் நீக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாக ஒன்ராறியோவின் உயர்மட்ட பொது சுகாதார அதிகாரி கூறினார்.

கியூபெக் மாகாண அரசாங்கம் எதிர்வரும் மார்ச் 14 ஆம் தேதிக்குள் ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளிகளின் வகுப்பறைகளில் முக கவசம் அணியும் விதிமுறையை நீக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. கடைசியாக மற்ற உட்புற இடங்களுக்கான கட்டுப்பாடுகளையும் நீக்கும் என்று தெரிவித்துள்ளது.

தலைமை மருத்துவ அதிகாரி மருத்துவர் கீரன் மூர் ,வியாழக்கிழமை நடைபெற்ற மாநாட்டின் போது அவ்வாறு நடக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்தார். அதற்குப் பதிலாக கட்டுப்பாடுகளை முற்றிலுமாக நீக்குவதற்கு திட்டமிட வேண்டும் என்று கூறினார். சில உயர் அபாய அமைப்புகளுக்கு விதிவிலக்குகள் வழங்கப்படலாம் என்று தெரிவித்தார்.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வகுப்பறையில் பாதுகாப்புடனும் நம்பிக்கையுடனும் இருப்பதை உறுதி செய்வதற்கு பள்ளிகளில் பொது சுகாதார நடவடிக்கைகளை நீக்கும் திட்டத்தை தாமதப்படுத்த வேண்டும் என்று மருத்துவ அதிகாரி மருத்துவர் கீரன் கூறினார்.

இது குறித்த ஆலோசனைகள் தொடங்கியுள்ளன. பெற்றோர்கள், பள்ளி வாரியங்கள் மற்றும் அமைச்சகத்துடன் இணைந்து நன்கு ஆலோசித்த பின்னர் அரசாங்கத்தின் முடிவு அறிவிக்கப்படும் என்று கூறினார்