தன் மகனின் ஆசையை நிறைவேற்ற முடியாமல் தவிக்கும் பெற்றோர் – நாய்க்குட்டியை தத்து கொடுக்க முடியாது என்று கூறிய அமைப்பு

Erin Doan and Mike Their son Henry non verbal autism ontario kismutt rescue dog adopting

கனடாவிலுள்ள Listowel-ன் Erin Doan மற்றும் Mike தம்பதியினருக்கு Henry என்ற 9 வயதுடைய மகன் உள்ளான்.சிறுவன் சரியாக பேச இயலாதவன். சமீபகாலமாக Ipad சாதனத்தில் நிறுவப்பட்ட சிறப்பு மென்பொருளின் உதவியுடன் படிப்படியாக பேசத் தொடங்கினான்.சிறுவன் Henry-க்கு நீண்டகாலமாக ஒரு நாய்க்குட்டி வளர்க்க வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. தனது ஆசையை சிறுவன் பெற்றோர்களிடம் கூறினான்.

தனது மகனின் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு Mike மற்றும் Doan நாயை தத்தெடுப்பது பற்றி விசாரிக்கத் தொடங்கினர்.” இது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது, நாங்கள் எப்போதும் நாய் விரும்பிகளாக இருந்தோம். மேலும் மகன் Henry நாயை தத்தெடுத்து வளர்ப்பதற்கு தயாராகும் வரை சிறிது காலம் நிறுத்தி வைத்திருந்தோம் ” என்று Doan கூறினார்.

ஒன்டாரியோவின் செயிண்ட் மேரிஸுக்கு வெளியே Kismutt rescue அமைப்பினால் ஆன்லைனில் நாய்க்குட்டியின் படம் மற்றும் விவரம் பதிவேற்றப்பட்டது. Doan நாய்க்குட்டியை தடுப்பதற்காக நாய்க்குட்டி பற்றிய விவரத்தை கேட்டபோது அவர்கள் அளித்த பதில் மிகவும் கவலை அளித்ததாக தெரிவித்தார். நாய்க்குட்டியை பற்றி விசாரிப்பதற்கு முன்னதாகவே Doan, தனது மகன் பேச மாட்டான் என்பதையும் மற்றும் Autism என்ற மன இறுக்கம் இருப்பதையும் அவர்களிடம் தெரிவித்தார்.

Kismutt rescue அமைப்பு மின்னஞ்சலில் ” மன்னிக்கவும் ,நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன், உங்கள் மகனின் மன இறுக்கத்திற்கு இது பொருத்தமானதாக இருக்கும் என்று நான் நம்பவில்லை.மேலும் எங்களது அமைப்பு Autism பாதிப்புடைய குடும்பங்களுக்கு நாய்களை தத்து கொடுப்பதில்லை ” என்று Erin Doan -க்கு பதில் அளித்து இருந்தது.
“தனது மகன் பாசம், பரிவு கொண்ட சிறு பையன். அவனிடம் கொடுப்பதற்கு நிறைய அன்பு உள்ளது.” என்று தனது மகனின் சிறப்பை தெரிவித்தார்.