சுற்றுச்சூழல் கனடா எச்சரிக்கை – பலத்த காற்றுடன் பனிப் பொழிவு ஏற்படும் அபாயம்

british columbia flooding rainfall credit cbc

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் நவம்பர் 17ஆம் தேதி முதல் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக சரக்குகள் மற்றும் போக்குவரத்து சேவைகள் துண்டிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் இயங்கி வருவதாக மாகாண அதிகாரிகள் கூறுகின்றனர்.

பிரிட்டிஷ் கொலம்பியாவின் தெற்குப் பகுதியிலுள்ள ஆறுகளில் தொடர் கனமழை காரணமாக கரைகள் உடைந்து சேறும் சகதியுமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது என்று திங்கட்கிழமை செய்தியாளர் சந்திப்பின்போது கூறினர்.

மெரிட், பிரேசர் பள்ளத்தாக்கு மற்றும் பிரின்ஸ்டன் ஆகிய இடங்களில் பெருமளவில் வெள்ளம் வெளியேற்றப்பட்டு உள்ளது.புதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை பிரேசர் பள்ளத்தாக்கில் பலத்த மழை பெய்யக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரேசர் பள்ளத்தாக்குக்கான பனிப்பொழிவு எச்சரிக்கையும் சுற்றுச்சூழல் கனடா அறிவித்துள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பியாவின் வடக்குப்பகுதிக்கான வானிலை எச்சரிக்கைகளையும் சுற்றுச்சூழல் கனடா வெளியிட்டுள்ளது. பலத்த காற்று மற்றும் பனிப்பொழிவு ஏற்படும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிலச்சரிவு இடர்பாடுகளை அகற்றியதை தொடர்ந்து நெடுஞ்சாலைகள் மீண்டும் திறக்கப்படுகின்றன. விவசாய நடவடிக்கைகளுக்கு அவசர அணுகலை வழங்குவதற்காக நெடுஞ்சாலை திறக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது .

மழை வெள்ளத்தில் இருந்து மக்கள், கால்நடைகள் மற்றும் செல்லப்பிராணிகள் போன்றவற்றை மீட்பதற்காக தன்னார்வலர்கள் களமிறங்கியுள்ளனர். மீட்புப் பணிகளுக்கு கனடிய ஆயுதப்படைகள் அனுப்பப்பட்டுள்ளன.

கம்லூப்ஸ் மற்றும் வான்கூவர் இடையே செவ்வாய்க்கிழமை ரயில் சேவையை மீண்டும் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகள் மீண்டும் நகரும் என்று பிளம்மிங் கூறினார்.