வெப்ப எச்சரிக்கை காரணமாக குளிரூட்டும் மையங்கள் – சுற்றுச்சூழல் கனடா

cn tower toronto

கனடாவில் பனிக்காலம் நிறைவடைந்ததை தொடர்ந்து கோடைக்காலம் தொடங்குகிறது. டொரன்டோ நகரில் காற்றின் ஈரப்பதத்தின் அளவு குறைந்து வருவதால் வெப்ப எச்சரிக்கை அறிவிக்கப்பட்டது. எதிர்வரும் மூன்று நாட்களுக்கு சுற்றுச்சூழலில் ஈரப்பதத்தின் அளவு 40 ஆக பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வருகின்ற புதன்,வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளின் பகல் நேரத்தில் வெப்பநிலை அதிகபட்சமாக இருபதிலிருந்து 30 வரை பதிவாகும் என்று சுற்றுச்சூழல் கனடா கூறுகிறது. வெப்பநிலை அதிகரிப்பதால் காற்றிலே ஈரப்பதத்துடன் வெப்பநிலை வினைபுரிந்து சுற்றுச்சூழலில் ஈரப்பதத்தின் அளவு 40க்கு அருகில் நெருங்கும் என்று தேசிய வானிலை மையம் தெரிவித்தது.

டொரன்டோ நகரில் பகல் நேரத்தில் வெப்பநிலை 20 டிகிரிக்கு மேல் உயரும் என்பதால், வெப்பத்திலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக நகரில் இரவு நேரங்களில் வெப்பநிலை சிறிது குறைந்து காணப்படும் என்று சுற்றுச்சூழல் கனடா அறிவுறுத்தியது.

வெப்பநிலை அதிகரிப்பதால் அடுத்த 3 நாட்களுக்கு காற்றின் தரம் மோசமடைய கூடுமென்று தேசிய வானிலை மையம் எச்சரித்தது. வெப்ப உயர்வில் இருந்து நகரில் வாழும் மக்களை பாதுகாத்துக்கொள்ள டொரண்டோ நகரம் முழுவதும் குளிரூட்டும் மையங்களை நகரம் திறக்கும்.இது தனி நபர்கள் ஓய்வு எடுக்க குளிரூட்டப்பட்ட இடங்களை வழங்கும்.குளிரூட்டப்பட்ட மையங்கள் நகரின் ஏழு இடங்களில் திறக்கப்பட உள்ளது.

வெப்ப எச்சரிக்கையின் போது மெட்ரோ ஹால் மையத்தை தவிர மற்ற மையங்கள் 24 மணி நேரம் இயங்கும். மற்ற நாட்களில் அனைத்து மையங்களும் காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரை திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

குளிரூட்டும் மையங்கள் அமைந்துள்ள பகுதி :

  • East York Civic Centre
  • Etobicoke Civic centre
  • Metro Hall – 55 jhon.st
  • North York Civic centre
  • Domenico Di Luca community centre
  • Don Montgomery community centre
  • Masaryk – cowan community recreation centre போன்றவையாகும்