குடித்த பாலை கூட செரிமானம் செய்ய இயலவில்லை..! டொரன்டோ மிருகக்காட்சி சாலையில் பரிதாபமாக இறந்த புலிக்குட்டி!

newborn Amur tiger

டொரன்டோவில் உள்ள மிருகக்காட்சி சாலையில் சில நாட்களுக்கு முன்பு புலிக்குட்டி ஒன்று பிறந்தது.

பிறந்து சில நாட்களே ஆன புலிக்குட்டி ஆனது உடல்நலக்குறைவால் உயிரிழந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மிருகக்காட்சி சாலை முகநூலில் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 30 ஆம் தேதியன்று புலியானது மூன்று குட்டிகளை ஈன்றது.

மூன்று குட்டிகளில் ஒரு குட்டி உடல்நலக்குறைவு பாதிப்பினால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. கால்நடை மருத்துவர்கள் மூலம் புலி குட்டிக்கு முறையான சிகிச்சை அளித்தும் பயனின்றி உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று அந்த ஆண் புலிக்குட்டி ஆனது மந்தமான நிலையில் காணப்பட்டது என்று மிருகக்காட்சி செயலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அந்த ஆண் புலிக்குட்டி அடிக்கடி சோதனை செய்யப்பட்டதில் கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

கல்லீரல் பாதிப்பு மிகவும் மோசமான நிலையில் இருப்பதால் அந்த ஆண் புலிக்குட்டி குடித்த பாலை கூட செரிமானம் செய்ய இயலவில்லை.

உயிருக்கு ஆபத்தான நிலையில் வாழ்ந்து வந்த புலிக்குட்டி தற்சமயம் பரிதாபகரமாக மரணித்து உள்ளது. மற்ற இரண்டு புலி குட்டிகளும் தொடர் கண்காணிப்பில் உள்ளதால் அவற்றை குறித்த அச்சம் ஏதும் கொள்ளத் தேவையில்லை என்று தெரிவித்துள்ளனர்.

மிருகக்காட்சி சாலையில் ஒரு ஆண் புலி குட்டி உயிரிழந்தது அங்கு பணிபுரியும் அனைவரையும் மிகுந்த துயரத்தில் ஆழ்த்தி உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.