கனடாவில் அவசர கால உத்தரவுகள் அடுத்த ஆண்டு வரை நீடிக்கப்பட வாய்ப்பு உள்ளதா? ஒன்றாரியோ மாகாண அரசின் திடீர் முடிவு!

covidontario
அவசர கால உத்தரவுகளை ஒரு வருடம் வரையில் நீட்டிக்கலாம் (CTV news)

கனடாவில் கொரோனா தொற்று பரவலின் வீரியத்தை பொறுத்து, அவ்வப்போது அவசரகால சட்டங்களை மாற்றியமைக்க ஏதுவாக ஒன்றாரியோ மாகாண அரசாங்கம் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தியது.

தற்போதைய சட்டத்தின் கீழ், அவசரகால நிலைமை இருக்கும்போது மட்டுமே மாகாணம் அவசர உத்தரவுகளை பிறப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் இன்னும் ஒரு ஆண்டுக்கு அவசரகால உத்தரவுகளை நீட்டிக்க முடியும். கொரோனா பரவலை கருத்தில் கொண்டு இயற்றப்பட்ட இச்சட்டத்தின் மூலம், அவசரகால உத்தரவுகளை நீட்டிக்கவோ அல்லது திருத்தவோ முடியும்.

இந்த சட்டம் இயற்றப்பட்ட நாளில் இருந்து, சரியாக ஒரு வருடம் கழித்து காலாவதியாகும் என்று சொலிசிட்டர் ஜெனரல் சில்வியா ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.

மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க, கட்டாயம் அவசர கால சட்டம் அவசியமாகிறது.

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தினம் தினம் அதிகரித்துக்கொண்டே செல்வதால் கடுமையான நிலையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

Facebook : https://www.facebook.com/tamilmicsetcanada/

Twitter : https://twitter.com/canadatms