மழை எச்சரிக்கைக்கு மத்தியில் மிசிசாகா புயல் வடிகாலில் இருந்து இரண்டு இளைஞர்களை அவசர மீட்பு குழு மீட்டுள்ளது

கனடாவின் மிசிசாகா பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று மாலை நேரம் பலத்த மழை பெய்துள்ளது. கனமழை காரணமாக வடிகால் ஒன்றில் நீரின் மட்டம் உயர்ந்து கொண்டிருந்த நிலையில் சிக்கித்தவித்த இரண்டு நபர்களை ஆபத்திலிருந்து அவசர குழுவினர் மீட்டெடுத்து அப்பகுதி மக்களிடையே பாராட்டுகளை பெற்றுள்ளனர். கிரெடிட் நதிக்கரைக்கு மாலை 6 மணி அளவில் காவல்துறை அதிகாரிகள் அவசர குழுவினர் மற்றும் மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்

.பீல் பகுதி காவல்துறையினர் ஆபத்தில் சிக்கியவர்கள் இருவரும் ஆணும் பெண்ணும் ஆவார்கள் என்றுகூறியிருக்கின்றனர்.ஆனால் இருவரையும் மீட்டு எடுத்த பின்னரே ஆபத்தில் சிக்கியது இரண்டு இளைஞர்கள் என்று தெரியவந்துள்ளது.

காவல்துறையினர் மற்றும் அவரது குழுவினர் தெரிவித்துள்ள தகவலின்படி புயல் மற்றும் பலத்த மழையின் போது ஆறு இளைஞர்கள் கல்வெட்டுகள் நுழைந்துள்ளனர். கனமழையின் காரணமாக நீர்மட்டம் விரைவாக உயர்ந்ததால் ஆபத்தில் சிக்கியுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

அவசர குழுவினர் மற்றும் காவல்துறையினரின் விசாரணை மற்றும் தேடுதல் தீவிரம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். அவசர குழுவினரின் அதிரடி செயல்பாடுகளால் அனைவரும் பாதுகாப்பாக காப்பாற்றப்பட்டுள்ளனர். இதுகுறித்து அவசர குழுவின் தலைவர் ட்விட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதாவது, “நாங்கள் அனைவரும் எதிர்பார்த்து பிரார்த்தனை செய்து கொண்டிருந்த நேர்மறையான தீர்வை அளித்த குழுவின் முயற்சி பாராட்டத்தக்கதாகும் ” என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஆபத்திலிருந்து காப்பாற்றுவதில் அனைவருக்கும் மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளனர். மேலும் மிசிசாகா பகுதியில் மேயர் போனி குரோம்பியும் அவசர மீட்பு குழுவினரை பாராட்டி ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.