இந்த மாதிரியான சூழலில் கனடாவில் தேர்தல் தேவையில்லை – பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அதிரடி முடிவு!

justin
Canada Lost Many peoples

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவர்கள் தற்பொழுது தேர்தல் பற்றி எந்த ஒரு திட்டமும் கிடையாது என்று லிபரல் கட்சியின் கூட்டத்தில் உரையாற்றிய போது தெரிவித்திருந்தார்.

மேலும் கனடாவில் covid-19 வைரஸ் தொற்று மூன்றாவது அலையாக பரவி வருகின்ற நிலையில் தேர்தல் ஒன்றினை நடத்தி மேலும் நெருக்கடியான நிலைக்கு கொண்டு செல்வதற்கு தனக்கு விருப்பமில்லை என்று அவர் தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து என்டிபி கட்சியின் தலைவர் ஜக்மீட் சிங் தேர்தல் நடைபெற வேண்டுமென்று கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் தேர்தலை நடத்துவதற்கு லிபரல் கட்சி அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

என்டிபி கட்சியின் மாநாட்டில் ஜக்மீட் சிங் அவர்கள் உரையாற்றிய பொழுது இந்த கருத்தினை அவர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிலையில் லிபரல் கட்சியின் தலைவர் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவர்கள் தேர்தலை நடத்துவது இல்லை என்று கூறுவது ஜனநாயக பிழையாகும் என்று என்டிபி கட்சியின் தலைவர் ஜக்மீட் சிங் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த சூழலில் கனடாவில் தேர்தல் நடத்தப்படுகிறதா? பிரதமர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

இதனோடு லிபரல் கட்சியின் ஆட்சியில் தற்பொழுது ஏற்பட்டுக் கொண்டிருக்கும் தவறுகள், முறைகேடுகள் போன்றவற்றை எடுத்துக்கூறி இவையெல்லாம் லிபரல் கட்சி ஆட்சியில் இருப்பதற்கு பொருத்தமற்ற கட்சி என்று விமர்சித்துள்ளார்.

மேலும் லிபரல் கட்சியின் covid-19 கட்டுப்பாடு மற்றும் நடவடிக்கை திட்டங்கள் அனைத்தும் சரியான முறையில் அனைவருக்கும் பயனளிக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.