கனடாவை மீள் கட்டமைக்க 19 பில்லியனுக்கும் அதிகமான கனேடிய டாலர்கள் – பிரதமரின் அறிவிப்பால் மகிழ்ச்சியில் கனேடிய மக்கள்!

economy
Economy Boost Up fund

கொரோனா பாதிப்பால் பெரும் வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளா கனடா பொருளாதரத்தை கட்டமைக்க, மத்திய அரசு 13 மாகாணங்களுக்கும், அதனை சார்ந்த பிற பிரதேசங்களுக்கும் பொருளாதாரத்தை மறு தொடக்கம் செய்ய நிதி ஒதுக்க திட்டமிட்டுள்ளது.

அதன்படி, 19 பில்லியனுக்கும் அதிகமான கனேடிய டாலர்களை வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது.

கனடாவில் பல மாதங்களாக கொரோனா ஊரடங்கு நிலவி வரும் வேளையில் வியாழக்கிழமை பிரதமர் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

14 பில்லியன் கனேடிய டாலர் அளிக்க கடந்த மாதம் உறுதி அளித்தபோது, ​​மாகாணங்கள் மற்றும் பிரதேசங்கள் பாதுகாப்பான மறுதொடக்கத்தை எட்ட விரும்புவதாக மத்திய அரசு முதலில் அறிவித்தது. அன்றிலிருந்து அடுத்தகட்ட பொருளாதார சீரமைப்பு நடவடிக்கைகளுக்காக பேச்சுவார்த்தைகள்  தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

வரவிருக்கும் 6 முதல் 8 மாதங்களில், அரசுக்கு ஏற்படும் அசாதாரண செலவுகளை ஈடுசெய்ய இந்த தொகையானது உதவும் என்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார்.

கொரோனா பரவலின் இரண்டாவது அலையை எதிர்கொள்ள தயாராக இருப்பது உட்பட கனடா மக்கள், சில முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களை கருத்தில் கொள்ளப்படும் என குறிப்பிட்டார்.

அந்த விஷயங்களில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் தொடர்புத் தடமறிதல், தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்குதல் இதில் அடங்கும்.

இதனுடன் கொரோனாவுக்கு எதிராக போராடும் நகராட்சிகளுக்கு போக்குவரத்து செலவுகளைச் செலுத்த உதவுதல், உள்ளூர் போக்குவரத்து ஊழியர்களுக்கு உதவுதல், முதியோருக்கான நீண்டகால பராமரிப்பை மேம்படுத்துதல் போன்றவையும் உடன் சேருகின்றன.

கொரோனா என்பது சுகாதார நெருக்கடியை தாண்டி, பொருளாதார நெருக்கடியாக மாறியுள்ளது என்று ட்ரூடோ கூறினார்.

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

Facebook : https://www.facebook.com/tamilmicsetcanada/

Twitter : https://twitter.com/canadatms