பெயர் மாற்றம் செய்தலை ஆதரிக்கும் முதல்வர் ஜான் டோரி

dundas

அடிமை வர்த்தகத்தை ஒழிப்பதில் தாமதம் ஏற்படுத்தியதில் பங்கு வகித்த ஸ்காட்டிஷ் அரசியல்வாதியின் பெயரால் டொரண்டோவில் உள்ள முக்கிய வழித்தடமான தண்டாஸ் தெரு புதிய பெயரை நிறுவ உள்ளது.

 

டொராண்டோ நகரசபை கடந்த புதன்கிழமை அன்று தெரு மற்றும் பிற குடியுரிமை சொத்துக்களுக்கு தண்டாஸ் என்ற பெயருடன் டிடிசி நிலையங்கள், பூங்காக்கள் மற்றும் யோங் தண்டாஸ் சதுக்கம் போன்ற பெயர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வாக்களித்துள்ளது.

 

பெயர் மாற்றம் செய்தலை ஆதரிக்கும் முதல்வர் ஜான் டோரி, வாக்களிப்பதற்கு முன்பு குடியுரிமைச் சொத்துக்களில் இருந்து தண்டாஸ் என்ற பெயரை நீக்குவது டொரன்டோ நகரின் மதிப்பினை மீண்டும் உறுதிப்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.
அரசியல்வாதிகள் டோரன்டோ நகரத்திற்கு எதுவும் செய்ததில்லை, வருகையும் தரவில்லை என்று முதல்வர் ஜான் டோரி குறிப்பிட்டு உள்ளார்.

 

தண்டாஸ் பெயர் மாற்றம்:

  • அடிமை வர்த்தகத்தை ஒழிப்பதில் ஹென்றி டண்டாஸின் பங்கு குறித்த கல்வி ஆராய்ச்சி பற்றிய விரிவான சோதனையைத் தொடர்ந்து சென்ற மாதம் தெருவிற்கு மறுபெயர் வைக்க நகர ஊழியர்கள் பரிந்துரைத்தனர். டண்டாஸ் என பெயர் மாற்றம் செய்வதற்கான முயற்சிகள் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. பெயர் மாற்றம் செய்வதற்கான மனுவில் சுமார் 14 ஆயிரம் பேர் கையெழுத்து இட்டனர்.
  • நிர்வாக குழுக்களுக்கு புதிய பெயர்களை நகர ஊழியர்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • மறு பெயரிடுதல் மூலம் பாதிப்படைந்த குடியிருப்பாளர்கள் மற்றும் வணிகங்களை ஆதரிப்பதற்கான ஒரு மாற்றம் ஏற்படுத்தும் திட்டத்தையும் இந்தக் குழு உருவாக்கும். தண்டாஸ் தெருவில் சுமார் 4000 வணிகங்கள் இயங்குவதாகவும் அவற்றில் 60 பேர் தங்கள் பெயர்களோடு “டண்டாஸ் ” என்று சேர்த்து வைத்திருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன