ஒன்ராறியோவில் கொரோனா தடுப்பூசி வேண்டி இனி அலையத்தேவையில்லை – மாகாண அரசின் அசத்தல் திட்டம்!

Ontario ford and christine eliot
Ontario ford and christine eliot

ஒன்டாரியோ மாகாண முதல்வர் டாக் போர்டு தடுப்பூசி மருந்து விநியோகித்தல் பற்றிய ஏற்பாடுகளை விரைவில் தெரிவிப்பதாககூறியுள்ளார்.

ஒரு நாளுக்கு முன்பாக தடுப்பூசி மருந்துகள் வழங்கப்படுவதற்கான கால அட்டவணை திட்டம் ஒன்டாரியோ அரசாங்கத்தால் வழங்கப்பட்டு விடும் என்றும் அறிவித்துள்ளார்.

தடுப்பூசி மருந்துகளுக்கான முன் பதிவினை அந்த அட்டவணை திட்டத்தின் மூலம் விரைவில் பதிவு செய்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் முதல்வர் டாக் போடு அவர்கள் செய்தி கலந்துரையாடலில் பங்கு பெறுவார் என்று தகவல்கள் கூறுகின்றன.

இந்த கலந்துரையாடலில் ஒன்டாரியோ மாகாணத்தின் பொது சுகாதாரத்துறை அமைச்சர் கிறிஸ்டின் எலியட் உடன் வழக்குரைஞர் சில்வியா, ஓய்வுபெற்ற ரிக் கில்லர் ஆகியோரும் பங்கு கொள்ள இருக்கின்றனர்.

இவர்கள் தடுப்பூசி மருந்துகளை மாகாணம் முழுவதும் விநியோகித்தலுக்கான ஏற்பாடுகள் பற்றி ஆலோசிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்று (திங்கட்கிழமை)  காலை முதல் தடுப்பூசி மருந்துகள் அனைத்தும் இணையத்தில் முன்பதிவு செய்துகொள்ளும் வகையில் தயார் செய்யப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது.

With files from The Canadian Press

சில வாரங்களுக்கு பின்னரே மற்ற பகுதிகளுக்கு இந்த ஏற்பாடுகள் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அல்பேட்டா மற்றும் கியூபெக் பகுதிகளுக்கு வாரத்தின் இறுதியில் வினியோகிக்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.