டக் போர்ட் மூன்றாம் கட்ட தளர்வுகள் குறித்து அறிவிப்பு

DOUG FORD
DOUG FORD

டொரண்டோவில் வியாழக்கிழமை பிற்பகல் ஒன்டாரியோ முதல்வர் டக் போர்ட் மற்றும் நீண்ட கால பராமரிப்பு அமைச்சர் ராட் பிலிப்ஸ் ஆகியோர் அறிவிப்பினை வெளியிட உள்ளார்கள். மாகாணம் covid-19 ஊரடங்கு மீளத் திறக்கும் மூன்றாவது கட்டத்திற்குள் நுழைவதற்கு ஒரு நாளைக்கு முன்னதாக அறிவிக்கப்படும்.

 

எதிர்வரும் வெள்ளிக்கிழமை அதிகாலை 12:01 மணியில் இருந்து , உள்ளக உணவு, உடற்பயிற்சிக் கூடம், மற்றும் திரையரங்கு செயல்பாடுகள் மீண்டும் இயங்குகின்றன. பொது இடங்களில் கட்டுப்பாடுகளுடன் கூடிய தளர்வுகள் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

ஒன்ராறியோவின் ஏழு நாள் covid-19 வைரஸ் தொற்று பதிவுகளின் சராசரி ஆனது 4 சதவீதத்திற்கும் குறைவாக பதிவாகியுள்ளது. ஏப்ரல் மாதத்தின் நடுப்பகுதியிலிருந்து தொடர் ஊரடங்கு மற்றும் தடுப்பூசி முகாம்கள் செயல்பட்டதன் மூலம் மாகாணத்தில் 79 சதவீதத்திற்கும் அதிகமானோர் முதல் கட்ட தடுப்பூசி பெற்றுக் கொண்டனர்.

 

முழுமையாக தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் மற்றும் covid-19 வைரஸ் தொற்று அறிகுறி இல்லாத ஊழியர்கள் ஒரு வசதிக்கு நுழைவதற்கு covid-19 பரிசோதனைக்கு சமர்ப்பிக்க வேண்டியதில்லை என்று நீண்ட கால பராமரிப்பு அமைச்சகம் நேற்று தெரிவித்தது. வெள்ளிக்கிழமையில் இருந்து ,எந்த நேரத்திலும் ஒரு வசதிக்கு அனுமதிக்கப்பட்ட பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

 

2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ஏறத்தாழ நான்காயிரம் குடியிருப்பாளர்கள் மற்றும் நீண்ட கால பராமரிப்பு ஊழியர்கள் கொரானா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.

 

பிலிப்ஸ் மற்றும் முதல்வர் டக் போர்ட் சரியாக பிற்பகல் ஒரு மணி அளவில் இதுகுறித்து பேசுவார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.