கனடாவிற்கு பயணிக்கக் கூடாது – அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்க வெளியுறவுத்துறை மற்றும் கட்டுப்பாட்டு மையம்

British Columbia
US-Canada Border Closure Leaves British Columbia's Tourism Industry In Trouble

கவலைக்குரிய மாறுபாடான Omicron வைரஸ் தொற்று உலகின் பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வருவதால் நாடுகளுக்கிடையேயான விமானப் போக்குவரத்தில் பயணக் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. கனடாவில் தொடர்ந்து வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் கனடாவிற்கு பயணிக்க வேண்டாம் என்று அமெரிக்காவின் வெளியுறவுத்துறை மற்றும் கட்டுப்பாட்டு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Covid-19 வைரஸ் தொற்று பரவலைத் தொடர்ந்து கனடாவில் omicron மாறுபாடு பரவல் அதிகரித்து வருவதால் அமெரிக்கா இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கனடாவிற்கான பயணம் அதிக ஆபத்து கொண்டது என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை மற்றும் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.எனவே அமெரிக்கர்கள் கனடாவிற்கு பயணிப்பதை தவிர்க்க வேண்டுமென்று கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தியுள்ளது.

அமெரிக்காவின் வெளியுறவுத்துறை மற்றும் கட்டுப்பாட்டு மையம் சுமார் 80 இடங்களை அதன் நான்காம் நிலையில் பட்டியலிட்டுள்ளது. அமெரிக்கா covid-19 மற்றும் ஓமிக்ரோன் போன்ற தொற்றிலிருந்து நாட்டு மக்களை பாதுகாப்பதற்கு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. இருப்பினும் அமெரிக்காவில் வைரஸ் தொற்று வழக்குகள் தினமும் பதிவாகி வருகின்றன.

கனடாவின் பல்வேறு மாகாணங்களிலும் வைரஸ் தொற்றினைகட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர இயலாமல் மாகாண அரசாங்கம் சிக்கித் தவிக்கிறது. மேலும் சமூக இடைவெளி, முகக் கவசம் அணிதல் போன்றவற்றை முறையாக பின்பற்றுமாறு அரசாங்கம் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.