கனடாவில் தீபாவளி கொண்டாட்டம் – பாரம்பரியத்தை இனிப்புகள் மூலம் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும் தருணம்

credit cbc diwali indo canadian

தெற்காசியாவில் ஆரவாரமாக கொண்டாடப்படும் தீபாவளித் திருநாள் கடந்த ஆண்டு covid-19 வைரஸ் தொற்று காரணமாக வீட்டிலேயே இருக்கும் நிலையை ஏற்படுத்தியிருந்தது. இந்தியாவில் இந்துக்கள், சீக்கியர்கள் ,ஜைனர்கள் மற்றும் பௌத்தர்கள் தீபாவளி திருநாளை இனிப்புகள் மற்றும் பட்டாசுகள் உடன் கொண்டாடுவார்கள்.

கனடாவின் பிராம்டன் பகுதியில் உள்ள இந்திய மற்றும் இந்தோ-கரீபிய சமூகத்தினர் தீப ஒளி திருநாளை ஆர்வமாக கொண்டாடுகின்றனர். கடந்த ஆண்டு வைரஸ் தொற்று காரணமாக வீட்டிற்குள்ளேயே இருக்கும் நிலை ஏற்பட்டது. ஆனால் இந்த வருடம் covid-19 வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி விகிதங்கள் அதிகரித்துள்ளன.

 

பிராம்டன் பிராந்தியத்தின் பெரும்பான்மையான வழிபாட்டு தலங்கள் Covid19 வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பு ஊசி மருந்து பெற்றுக் கொண்டதற்கான ஆதாரம், சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அணிதல் போன்ற அரசாங்கத்தால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை உறுதிப்படுத்துகின்றன என்று பிராம்டன் நகரத்தின் கவுன்சிலர் ஹார்கிரத் சிங் கூறினார்.

Covid-19 வைரஸ் தொற்று கட்டுப்பாடுகள் அரசாங்கத்தால் தளர்த்தப்பட்டுள்ளதால் நகர மக்கள் விதிமீறல் செய்யாமல் தீபாவளியை கொண்டாடுவதற்கு ஆர்வம் காட்டுகின்றனர். இந்தியாவிலிருந்து கனடாவிற்கு குடியேறிய மக்கள் தங்களது பாரம்பரிய திருநாளை நினைவுகூர்ந்து கனடாவில் கொண்டாடி வருகின்றனர்.

பிராம்டன் நகரில் மக்கள் விளக்குகள் ஏற்றி ரங்கோலி கோலம் இட்டு தீபாவளி திருநாளின் மகிழ்ச்சியை இனிப்புகள் மூலம் பகிர்ந்து கொள்கின்றனர். இருளை அகற்றி ஒளியைக் கொண்டு வரும் நன்னாள் தீபாவளி திருநாள் என்று சமூகத்தினர் தெரிவித்துள்ளனர்.