Bill Morneau : கனடா நிதியமைச்சா் திடீர் ராஜினாமா! பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோவுடன் மோதல் வெடிப்பு!

Bill Morneau
Bill Morneau Resigns

Bill Morneau ; கனடாவில் கொரோனா நோய்த் தொற்றுத் தடுப்புப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் விவகாரத்தில் பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோவுடன் நிதியமைச்சா் பில் மோா்னோ (Bill Morneau) ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நிதியமைச்சா் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ஜஸ்டின் ட்ரூடோவின் அமைச்சரவையில் 5 ஆண்டுகளாக நிதியமைச்சராக இருந்து வந்தவர் பில் மோா்னோ.

இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அறிவித்துள்ளாா்.

கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்காக நிதி ஒதுக்கீடு விவகாரத்தில் பிரதமருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

The Brass Rail: கனடாவில் இரவு விடுதிக்கு நடனம் பார்க்கச் சென்ற 500 ஆண்கள்! சமீபத்தில் வெளியான தகவலால் காத்திருக்கும் அதிர்ச்சி!

இது ஒரு பக்கம் இருக்க ஜஸ்டின் ட்ரூடோ, பில் மோா்னோ ஆகிய இருவருக்குமே தொடா்புடைய வீ அறக்கட்டளை முறை கேடு விவகாரத்தில் முதலில் மோதல் வெடித்தது.

அந்த விவகாரத்தில் கவனத்தை திசை திருப்பும் வகையில் பில் மோா்னோ நீக்கப்ட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

அந்த அறக்கட்டளை நிகழ்ச்சிகளில் உரையாற்றியதற்காக ட்ரூடோவின் மனைவி, சகோதரா், தாய் ஆகியோருக்கு மொத்தம் 2.21 லட்சம் டாலா் அரசுப் பணம் வழங்கப்பட்டது.

மேலும், அந்த அறக்கட்டளையைப் பயன்படுத்தி நிதியமைச்சா் பில் மோா்னோவும், அவரது குடும்பத்தினரும் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டது அம்பலமானது.

கென்யா, ஈக்வடாா் ஆகிய நாடுகளுக்கு இலவச சுற்றுப் பயணம் சென்று வந்தனர்  என்று எதிா்க்கட்சியினா் குற்றம் சாட்டி வருகின்றனா். இந்தச் சூழலில், பில் மோா்னோ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளாா்.

பதிவியிலிருந்து நீக்கப்படுவதற்கு முன்னதாக, தாமாக முன் வந்து ராஜினாமா செய்து விட்டதாக கூறப்படுகிறது.

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

Facebook : https://www.facebook.com/tamilmicsetcanada/

Twitter : https://twitter.com/canadatms