டெல்டா மாறுபாடு தீவிரம் – ஒன்டாரியோ மக்களுக்கு மருத்துவர் கீரன் எச்சரிக்கை

vaccine
Canada recommends vaccine

ஒன்ராரியோ மாகாணத்தில் covid-19 ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு கல்விக்கூடங்கள், பாடசாலைகள் மற்றும் பல்வேறு துறைகள் மீண்டும் இயங்குகிறது. Covid-19 வழக்குகள் தினசரி பதிவாகி வரும் நிலையில் covid-19 தடுப்பூசி மருந்துகள் மாகாணத்தின் அனைத்து பகுதிகளிலும் விரைவாக விநியோகிக்கப்படுகின்றன. அனைத்து துறைகளும் மீண்டும் திறக்கப்பட்டதை தொடர்ந்து ஒன்டாரியோவில் தகுதியுள்ள மக்கள் 90% பேர் covid-19 தடுப்பூசி மருந்து பெறுவதற்கு இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகலாம் என்று கூறப்படுகிறது.

மக்களை அச்சுறுத்தி வரும் டெல்டா மாறுபாடு மற்றும் covid-19 வைரஸ் தொற்றின் தாக்கத்தினை எதிர்த்து போராடுவதற்கு ஒன்ராறியோவில் 90% மக்கள் தடுப்பூசி போடுதல் என்ற இலக்கை அடைய வேண்டும் என்று சுகாதார தலைமை மருத்துவ அதிகாரி மருத்துவர் கீரன் மூர் அறிவித்துள்ளார்.

மாகாணத்தின் முதல்வர் டக் போர்ட் தடுப்பூசி சான்றிதழை மாகாணத்தில் கட்டாயமாக்கியதிலிருந்து மாகாணத்தின் மக்கள் அனைவரும் தடுப்பூசி பெற்றுக் கொள்வதில் தீவிரம் காட்டுகின்றனர். இதன் விளைவாக ஒன்ராறியோ மாகாணத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்கள் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. இன்றைய புள்ளிவிவரங்களின்படி ஒன்ராரியோ மாகாணத்தில் 79 சதவீதத்தினர் covid-19 தொற்றுக்கு எதிராக முழுமையாக பெற்றிருக்கிறார்கள்.

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாநாட்டில் covid-19 தொற்றின் தீவிரத்தையும், தடுப்பூசி மருந்துகளின் விகிதங்கள் பற்றியும் மருத்துவர் கீரன் உரையாற்றினார். Covid-19 தடுப்பூசி மருந்துகளின் வினியோகத்தில் சீரான முன்னேற்றம் இருப்பதாகவும், தொற்றிலிருந்து பாதுகாப்பான நிலைக்கு எடுத்துச் செல்வதற்கு 60 நாட்களுக்கு மேல் ஆகலாம் என்று அவர் கூறினார்.