ஒன்டாரியோ மாகாணத்தை அச்சுறுத்தும் டெல்டா வகை covid-19 வைரஸ்

DOUG FORD
DOUG FORD

தடுப்பூசி வினியோகத்தில் தடுமாற்றம் :

Covid-19 உருமாறிய வைரஸ் திரிபுகள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துகின்றன. கனடாவில் டெல்டா திரிபு வைரஸ் அச்சுறுத்தி வருகின்றது. ஒன்டாரியோ மாகாணத்தில் 90 சதவீத குடியிருப்பாளர்கள் முழுமையாக தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே டெல்டா வைரஸ் அச்சுறுத்தலை தவிர்க்கமுடியும் என்று பொது சுகாதார அதிகாரி கூறியுள்ளார்.

12 வயதுக்கு மேற்பட்டவர்கள் குறைந்தது முதல்கட்ட தடுப்பூசி செலுத்திக்கொண்டு 75 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் முழுமையாக தடுப்பூசி பெற்றுக் கொண்ட பின்னரே மாகாணத்தில் அனைத்து பொது சுகாதார கட்டுப்பாடுகளையும் நீக்குவது சாத்தியம் என்று மாகாண முதல்வர் டக் போர்ட் கூறினார்.

கடந்த செவ்வாய்க்கிழமை அன்று சுகாதார தலைமை மருத்துவ அதிகாரி மருத்துவர் கீரன் மூர் டெல்டா மாறுபாட்டின் அபாயத்தை கணக்கிடுவதற்கு மாகாணம் ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று கூறினார்.

அதிக அளவில் டெல்டா மாறுபாடு பதிவு :

ஒன்டாரியோ மாகாணம் இதுவரை 18 மில்லியன் covid-19 தடுப்பூசி மருந்துகளை வழங்கியுள்ளது. ஆனால் மாகாணத்தில் 2.4 மில்லியன் மக்கள் முதல் கட்ட தடுப்பூசி மருந்தை கூட செலுத்தி கொள்ளவில்லை என்று அவர் கூறினார். கடந்த திங்கட்கிழமை 132000 covid-19 தடுப்பூசி மருந்துகளை மாகாணம் வழங்கியது.

ஒன்டாரியோ குடியிருப்பாளர்கள் அனைவருக்கும் covid-19 தடுப்பூசி மருந்து செலுத்துவதில் 90 சதவீத இலக்கை அடைவதற்கு பல மாதங்கள் ஆகலாம் என்று கூறினார். ஒன்ராரியோ மாகாணத்தில் பதிவாகியுள்ள covid-19 வைரஸ் தொற்றுகளில் 90% டெல்டா மாறுபாடு என்று தகவல்கள் கூறுகின்றன.