Ye Jianhui: நான்கு கனேடியர்களுக்கு மரண தண்டனை விதித்து சீனா உத்தரவு!

Ye Jianhui
Death Penalty Ye Jianhui

Ye Jianhui : ஏற்கனவே கனடாவை சேர்ந்த ஒருவருக்கு, கடந்த சில தினங்களுக்கு முன்பு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த சீன நீதிமன்றம் மற்றொரு கனேடியருக்கு போதைப் பொருள் குற்றச்சாட்டில் மரண தண்டனை விதித்துள்ளது.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் உற்பத்தி செய்த குற்றத்திற்காக மரண தண்டனை விதித்ததாக சீன நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு போதைப்பொருள் தயாரித்ததற்காக கனடா நாட்டவர் மீது,

வோறொரு சீன நீதிமன்றம் மரண தண்டனை விதித்த ஒரு நாள் கழித்து, இன்னொருவருக்கு மரண  தண்டனை வழங்கப்பட்டது.

தெற்கு நகரமான ஃபோஷனில் நடந்த வழக்கு விசாரணைக்கு பின்னர்  மரண தண்டனை விதிக்கப்பட்டதாக ஃபோஷன் இடைநிலை மக்கள் நீதிமன்றம் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.

சீனாவில் கடந்த 2 நாட்களுக்குள் இரண்டாவது கனேடியருக்கு போதைப்பொருட்கள் குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டில் கனடாவில் சீன நிறுவன உயர் அதிகாரி கைது செய்யப்பட்டதில் இருந்து,  தற்போது வரை சீனாவில் போதைப்பொருள் குற்றச்சாட்டில் நான்கு கனடா நட்டவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டு அமெரிக்கா பிறப்பித்த பிடியாணையின் கீழ் கனேடிய காவல்துறையினர் ஹவாய் டெக்னாலஜிஸ் நிறுவன தலைமை நிதி அதிகாரி மெங் வான்ஷோவை வான்கூவரில் கைது செய்தனர்.

அதற்கு பின்னர் சீனாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான உறவுகள் கடுமையாக மோசமடைந்தன.

கனடாவை சேர்ந்த போதைப்பொருள் குற்றவாளிகளின் தண்டனை மெங்கின் வழக்கோடு தொடர்புடையதா என்று கேட்கப்பட்டதற்கு,  சீனாவின் நீதித்துறை வழக்குகளை சுயமாக கையாளுகின்றன என்று சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் கூறினார்.

சீனாவில் சிறைபிடிக்கப்பட்டுள்ள இரண்டு கனேடியர்கள் – பிரதமரின் குற்றச்சாட்டுக்கு சீனாவின் பதில் என்ன.?

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

Facebook : https://www.facebook.com/tamilmicsetcanada/

Twitter : https://twitter.com/canadatms