சிடிவி நியூஸ் சேனல் தொகுப்பாளர் பெவர்லி தாம்சனுக்கு ‘Order of Canada’ கெளரவம்

Beverly Thomson named Order of Canada (Image Credit - CTV News)
Beverly Thomson named Order of Canada (Image Credit - CTV News)

Order of Canada: மூத்த பத்திரிகையாளரும் சிடிவி நியூஸ் சேனல் தொகுப்பாளருமான பெவர்லி தாம்சன் Order of Canada கௌரவத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஒளிபரப்புத் துறை, தன்னார்வத் தொண்டு மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு அமைப்புகளுக்கு அவர் அளித்த பங்களிப்புகளுக்காக பெவர்லி தாம்சனுக்கு நேற்று (டிச.27) இந்த கெளரவம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க – Canada Holidays 2020: கனடாவில் எந்தெந்த நாட்களுக்கு விடுமுறை? முழு லிஸ்ட் இங்கே

“பெவர்லி தனது துறையில் ஒரு உண்மையான தலைவராக விளங்குகிறார். ஒவ்வொரு நாளும் மில்லியன் கணக்கான கனடியர்களை தனது அபாரமான நேர்காணல்கள் மற்றும் கதைசொல்லல் மூலம் ஊக்கப்படுத்துகிறார்” என்று சிடிவி செய்தித் தலைவர் வெண்டி ஃப்ரீமேன் ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

“அந்த பத்திரிகை சிறப்போடு தனது அபார பங்களிப்பை கொடுத்து, பெவர்லி கனடாவை ஒரு சிறந்த நாடாக மாற்ற உதவுவதில் நீண்டகாலமாக பணிபுரிந்து வருகிறார்” என்று பெல் மீடியா தலைவர் ராண்டி லெனாக்ஸும் புகழ்ந்துள்ளார்.

மேலும் படிக்க – கனடாவின் டாப் 10 பணக்காரர்கள் யார் தெரியுமா?

“இந்த மதிப்புமிக்க Order of Canada கௌரவத்துக்கு அறிவிக்கப்பட்டிருப்பது உண்மையிலேயே அவரது நம்பமுடியாத பங்களிப்புகளுக்கு ஒரு சான்றாகும்” என்றார்.

தாம்சன் பத்திரிகைத் துறையில் சுமார் 30 ஆண்டுகாலமாக பணியாற்றியுள்ளார். சிடிவி நியூஸ் சேனலில் நண்பகல் தொகுப்பாளராக மாறுவதற்கு முன்பு, 2003 முதல் 2016 வரை சிடிவியின் கனடா ஏஎம்-ன் இணை தொகுப்பாளராக இருந்தார்.

செய்தி அறைக்கு வெளியே, தாம்சன் பல தொண்டு நிறுவனங்கள் மற்றும் இலாப நோக்கற்ற நிறுவனங்களுக்கு நேரத்தை அர்ப்பணிக்கிறார். மிக முக்கியமாக, அவர் கனடிய மார்பக புற்றுநோய் அறக்கட்டளையின் கௌரவ உறுப்பினராகவும் செய்தித் தொடர்பாளராகவும் உள்ளார்.

மேலும், ஆர்டர் ஆஃ ப் கனடா விருது வென்றவர்களின் முழு லிஸ்ட் அறிய இங்கே க்ளிக் செய்யவும்