தன்னார்வ சேவைக்காக 5,000 டொலர்கள் வரை சம்பாதிக்கலாம்! பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

economy
Economy Boost Up fund

ஆயிரக்கணக்கான தற்காலிக வேலை வாய்ப்புகள் குறித்த, கனடா மாணவர் சேவை மானியத் திட்டத்தின் புதிய விபரங்களை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.

வேலை மற்றும் அனுபவத்தைத் தேடும் இளைஞர்களுக்காக ஆயிரக்கணக்கான தற்காலிக வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தொற்றுநோய் தொடர்பான திட்டங்களில் தன்னார்வத் தொண்டு செய்வதற்கு 5,000 டொலர் வரை ஒரு முறை வழங்கப்படும்.

கனேடிய மக்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை! மீறினால் 5000 டாலர் அபராதத்தோடு சிறை செல்ல நேரிடும்!

இது வேலை செய்யும் நேரத்தின் எண்ணிக்கையைப் பொறுத்து அமையும். செலவழிக்கும் ஒவ்வொரு 100 மணி நேரத்திற்கும், ஒரு மாணவர் 1,000 டொலர்களைப் பெறுவார். அதிகபட்சம் 500 மணி நேரத்திற்கு 5,000 டொலர்கள் பெறமுடியும்.

இதற்கு தகுதி பெற வயது 15 முதல் 30க்குள் இருக்க வேண்டும். மேலும், கனேடிய குடிமகன், நிரந்தர வசிப்பாளார் அல்லது அகதி அந்தஸ்துள்ள மாணவராக இருக்க வேண்டும்.

ஜூன் 25 முதல் 2020 அக்டோபர் 31ஆம் தேதி வரை பணியாற்றும் நேரங்களை மட்டுமே கணக்கிட முடியும்.

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

Facebook : https://www.facebook.com/tamilmicsetcanada/

Twitter : https://twitter.com/canadatms