கனடாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,934 பேருக்கு கொரோனா பாதிப்பு- 40 பேர் உயிரிழப்பு!

COLCHICINE
CANADIAN ANTI-INFLAMMATORY DRUG COLCHICINE REDUCES COVID-19 RELATED COMPLICATIONS, DEATH

கனடாவில் ஊரடங்கு தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.  அனைத்து மாகாணங்களிலும் தடுப்பூசி மருந்து வினியோகம் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இருப்பினும் கனடாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக,  ஒவ்வொரு நாளும் பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகமாகவும் உயிரிழப்புகளும் பதிவாகிக் கொண்டே இருக்கின்றன.

இந்த நிலையில் கனடாவில் கொரோனா வைரஸ் பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் நான்காயிரத்து 9349 பேர் பாதிக்கப்பட்டதோடு 40 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 22 ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக வைரஸ் பெருந் தொற்றினால், ஒன்பது இலட்சத்து 38 ஆயிரத்து 719 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 22 ஆயிரத்து 716 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 35 ஆயிரத்து 844 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 586 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், இதுவரை எட்டு இலட்சத்து 80 ஆயிரத்து 159 பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

கனடாவில் விரைவில் தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்படும் என்று பொது சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.