கனடாவில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 68,693 ஆக அதிகரிப்பு!

corona canada
cp24

கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக, கடந்த 24 மணி நேரத்தில், 21 பேர் உயிரிழந்துள்ளனர். புதிதாக 319 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி, உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8663 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,05,091 பேராக  அதிகரித்துள்ளது. மாகாண மற்றும் பிராந்திய தகவல்களின் அடிப்படையில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது.

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு, 27,735 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏற்கனவே 68,693 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுதவிர, 2,118 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

Facebook : https://www.facebook.com/tamilmicsetcanada/

Twitter : https://twitter.com/canadatms