அதிகரிக்கும் பரவல்! கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 23 ஆவது நாடாக விளங்கும் கனடா!

covid-19
Teachers Test Covid-19 Positive

இந்தியா, பிரேசில் போன்ற நாடுகளில் கொரோன வைரஸ் இரண்டாவது மூன்றாவது அலை வரிசையாக உருவெடுத்து விரைவாக பரவி வருகிறது.

கனடாவில் முழுவதுமாக ஊரடங்கு நீக்கப்படாமல் இருந்தபோதிலும் வைரஸ் தொற்றுகளின் எண்ணிக்கை தினசரி அதிகரித்துக் கொண்டே வருகிறது என்று புள்ளிவிவரங்கள் தகவலை வெளியிடுகின்றன.

கனடாவின் வைரஸ் தொற்றுக்கு பாதிப்பின் எண்ணிக்கை இதுவரை ஒன்பது லட்சத்தை தாண்டியுள்ளது.

இந்த நிலையில், கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

கனடாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றினால், கடந்த 24 மணி நேரத்தில்  4050 பேர் பாதிக்கப்பட்டதோடு 24 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 23 ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக வைரஸ் பெருந் தொற்றினால், ஒன்பது இலட்சத்து 4 6ஆயிரத்து 370 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 22 ஆயிரத்து 759 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 37, 099 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 586 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், இதுவரை எட்டு இலட்சத்து 86 ஆயிரத்து 512 பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

கனடிய அரசாங்கம் உடனடியாக தடுப்பூசி மருந்து விநியோகித்தல் மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேம்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானம் செய்துள்ளது.