ஒன்ராரியோ மாகாண தடுப்பூசி திட்டத்தில் முதலில் இவர்களுக்கே முன்னுரிமை அதிகம்!

covid19
Ontario's latest goal for its immunization campaign is to give a dose of COVID-19 vaccine to every adult who wants one by June 20. (Grant Linton/CBC)

ஒன்ராரியோ மாகாணத்தில் முதற்கட்டமாக 65 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்ட நிலையில், தற்பொழுது இரண்டாவது கட்ட நடவடிக்கையாக தடுப்பூசி மருந்துகள் வழங்கப்படுவதற்கு அறிக்கை ஒன்றினை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

ஒன்ராறியோ மாகாண அதிகாரிகள் உணவு விடுதிகளில் பணிபுரியும் வேலை ஆட்களுக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று அறிவித்துள்ளனர். இந்த அறிவித்தல் ஆனது உணவு விடுதிகளில் வேலை செய்பவர்கள் இடையே பலதரப்பட்ட கேள்விகளை எழுப்புகிறது.

ஒன்ராறியோ அரசாங்கம் தடுப்பூசி மருந்து செலுத்தும் பட்டியலில் குறிப்பிடப்படாத வரிசைகளையும் திடீரென இணைத்துக் கொள்வது என்பது அரசாங்கத்தின் அறிவிப்பை மீறுதல் போன்றதாகும் என்று கூறியுள்ளனர்.

ஏற்கனவே மார்ச் 5 ஆம் தேதி அன்று இரண்டாவது கட்டமாக தடுப்பூசி செலுத்தப்படும் பட்டியலை ஒன்டாரியோ அதிகாரிகள் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த பட்டியலில் காணப்படும் வரிசைப்படி தொழிலாளர்கள் 2 வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளனர்.

முதல் பிரிவில் ஆசிரியர்கள் குழந்தை பராமரிப்பாளர் ,உணவு தயாரிப்பாளர்கள் அல்லது வேளாண் தொழிலாளர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.

இரண்டாவது பிரிவில் பலசரக்கு அங்காடி, மருந்தகங்களில் வேலை புரிபவர்கள் மற்றும் சில்லரை வியாபாரிகள் ஆகியோரும் இணைக்கப்பட்டுள்ளனர்.