ஒவ்வொரு கனேடிய மக்களுக்கும் இலவசமாக 10 கொரோனா தடுப்பூசி – நிதி அமைச்சர் கிறிஸ்டியா அதிரடி!

Virus Outbreak
FILE - In this March 16, 2020, file photo, Neal Browning receives a shot in the first-stage safety study of a potential vaccine for COVID-19

ஒவ்வொரு கனேடிய மக்களுக்கும் இலவசமாக 10 கொரோனா தடுப்பூசி போடும் அளவுக்கு நாடு பல்வேறு தடுப்பூசி ஒப்பந்தங்களில் 1 பில்லியன் டாலருக்கும் மேல் முதலீடு செய்துள்ளதாக நிதி அமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் தெரிவித்துள்ளார்.

இந்த இலையுதிர் காலம் 2020 ஆம் ஆண்டிற்கான தேசிய பொருளாதார அறிக்கை வெளியிட்ட அவர், அதனைத்தொடர்ந்து ஆற்றிய உரையில் இது குறித்த விவரங்களை வெளியிட்டார்.

அப்போது, ஒவ்வொரு கனேடிய மக்களுக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடும் அளவிற்கு நாடு பல்வேறு தடுப்பூசி ஒப்பந்தங்களில், 1 பில்லியன் டாலருக்கும் மேல் முதலீடு செய்துள்ளது.

ஒவ்வொரு கனேடிய மக்களுக்கும், பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தடுப்பூசி இலவசமாக கிடைக்கும் என்று உறுதியளிக்க முடியும். இது ஒரு குழு முயற்சியாகும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், 322 பில்லியன் டாலர்களை, வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கும், மக்களுக்கு உதவுவதற்கும் நேரடி நடவடிக்கைகளில் அரசு செலவிட்டுள்ளது. 85 பில்லியன் டாலர் வரி மற்றும் சுங்கவரி ஒத்திவைப்புகளும் உள்ளன என்று அவர் கூறினார்.

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அறிவிப்பில், அரசாங்கத்தால் திட்டமிடப்பட்ட பெரிய அளவிலான தடுப்பூசி திட்டமாக இது விளங்கும். வரலாற்றில் மிகப்பெரிய நோய்த்தடுப்பு செயல்முறையாக விளங்கும்.

செப்டம்பர் 2021 ஆம் ஆண்டுக்குள் பெரும்பாலான கனேடிய மக்களுக்கு தடுப்பூசி போடவேண்டும் என்பதை இலக்காக கொண்டு, கனடா மைய அரசு, மாகாணங்களுக்கு வழிகாட்டுதலை வழங்கியுள்ளது.

இந்த டிசம்பரின் மையப்பகுதியில் தினமும் 10 ஆயிரம் கொரோனா தொற்றுகள் வரை அதிகரிக்கக்கூடும் என்பதால், பல மாகாணங்கள் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்துவதாக அறிவித்துள்ளன. தொற்றை கட்டுப்படுத்த விதிகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன.

இதையும் படியுங்க: கனேடியர்களை எச்சரிக்கும் பிரதமர்!

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.