தடுப்பூசி சான்றிதழ்களை வலியுறுத்தும் ஒன்டாரியோ – 75% பாதுகாப்பை வழங்கும் பூஸ்டர் தடுப்பூசி

restaurant food
mayor

கனடாவின் ஒன்ராரியோ மாகாணத்தில் உணவகங்கள், உடற்பயிற்சி கூடங்கள்,வணிகங்கள் மற்றும் திரையரங்குகள் திங்கட்கிழமை முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளன. ஆனால் covid-19 வைரஸ் தொற்றுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் covid-19 வழக்குகள் உச்சத்தை தொட்டிருக்கும் நிலையில் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளதா என்பது வினாக்களாகவே உள்ளன .அதிகளவில் பரவக்கூடிய வீரியமிக்க Omicron மாறுபாட்டால் இந்த மாத தொடக்கத்தில் மூடப்பட்ட வணிகங்கள் மற்றும் பிற வசதிகள் அனைத்தும் குறிப்பிட்ட திறன் வரம்புகள் உடன் மீண்டும் இயங்குவதற்கு அனுமதிக்கப்படுகின்றன.

Covid-19 வைரஸ் தொற்றுக்கு எதிராக தற்போது முழுமையாக தடுப்பூசி போடப்பட்டதாக கருதப்படும் covid-19 தடுப்பூசியின் இரண்டு தவணைகளை முழுமையாகப் பெற்றதற்கான ஆதாரங்களை காண்பிக்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் .

கவலைக்குரிய மாறுபாடான ஓமிக்ரோன், மற்றும் அதிக அளவில் பரவி வரும் covid-19 போன்றவற்றிலிருந்து உடல் நலனைப் பாதுகாத்துக் கொள்ள மூன்றாவது கட்ட தடுப்பூசியாக பூஸ்டர் தடுப்பூசி மருந்துகளை குடியிருப்பாளர்கள் பெறவேண்டுமென்று அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

Covid-19 வைரஸ் தொற்றுக்கு எதிராக மூன்று தடுப்பூசி டோஸ்கள் பெற்ற முதல் மாதத்தில் ஓமிக்ரோன் போன்றவற்றிலிருந்து 75 சதவீத பாதுகாப்பை வழங்க முடியும் என்று ஒன்ராரியோ மாகாணத்தின் அறிவியல் ஆலோசனை அட்டவணை சுட்டிக்காட்டியுள்ளது