ஒரே நாளில் இவ்வளவு உயிரிழப்புகளா? – ஒன்டாரியோவில் covid-19 வைரஸ் பரவல் தொடர்பான உயிரிழப்புகள்

credit-cp24 corona virus update

கனடாவின் ஒன்ராரியோ மாகாணத்தில் மொத்த covid-19 இறப்பு எண்ணிக்கையில் 90க்கும் மேற்பட்ட புதிய இறப்புகளைச் சேர்த்துள்ளது.covid-19 வைரஸ் தொற்று நோய் பாதிப்புடன் ஒன்டாரியோ மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 4000 ஆக குறைந்துள்ளது. ஒன்ராரியோ மாகாணத்தில் 92 வைரஸ் தொடர்பான வழக்குகள் பதிவாகியுள்ளதாக மாகாண சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதத்தில் covid-19 வைரஸ் தொற்றினால் 89 உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி வைரஸ் தொற்று பாதிப்பினால் ஒரே நாளில் 100 மரணங்கள் நிகழ்ந்ததாக உறுதிசெய்யப்பட்டதிலிருந்து மாகாணத்தில் பதிவான அதிகபட்ச இறப்பு எண்ணிக்கை இதுவாகும்.

ஒன்ராரியோ மாகாணத்தின் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள கோவிட் 19 நோயாளிகளின் எண்ணிக்கை தற்போது 4016 ஆக உள்ளது. மேலும் தீவிர சிகிச்சை பிரிவில் 608 பேர் வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வருகின்றனர்.ஒரு வாரத்திற்கு முன்பு ஒன்ராரியோ மாகாணத்தில் covid-19 வழக்குகளின் எண்ணிக்கை 4132 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.

Covid-19 வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் 56 சதவீதம் பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டதாகவும் 44 சதவீதம் பேர் பிற சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மாகாண அரசாங்கம் கூறுகிறது. இன்று ஒரே நாளில் ஒன்ராரியோ மாகாணத்தில் 5368 வழக்குகள் உறுதி செய்யப்பட்டுள்ளன