படிப்படியாக வீழ்ச்சியை சந்திக்கும் covid-19 வழக்குகள் – ஒன்டாரியோ

Ontario residents

ஒன்ராரியோ மாகாணத்தில் வாரந்தோறும் Covid-19 வைரஸ் தொற்று எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. ஒன்டாரியோவில் Covid-19 தடுப்பூசி சான்றிதழ் நடைமுறைப்படுத்த பட்டுள்ளது .மாகாணத்தின் பல்வேறு இடங்களிலும் நடத்தப்பட்ட covid-19 பரிசோதனைகளில் நேர்மறை முடிவுகளின் விகிதம் குறைந்து வருவதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை 700 க்கும் குறைவான covid-19 வைரஸ் தொற்று வழக்குகளையும் 11 மரணங்களையும் மாகாணம் அறிவித்துள்ளது .கடந்த வாரம் 795 covid-19 வழக்குகள் பதிவாகியது. கடந்த வியாழக்கிழமை 677 covid-19 வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில் வெள்ளிக்கிழமை 727 வழக்குகள் பதிவாகியுள்ளன என்று மாகாண சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட 170 பேர் covid-19 வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. சமிபத்திய வழக்குகளில் 56 பேர் ஓரளவு தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் என்று கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களில் 447 பேர் முழுமையாக தடுப்பூசி பெற்றுக் கொள்ளாதவர்கள் என்று குறிப்பிடப்படுகிறது.

ஒன்டாரியோ மாகாணத்தில் 30% சதவீத மக்கள் covid-19 வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி மருந்துகளைப் பெற்றுக் கொள்ளவில்லை என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
கடந்த வாரம் covid-19 வழக்குகளின் ஏழு நாள் சராசரி 724 உடன் இந்த வார covid-19 வழக்குகளின் ஏழுநாள் சராசரி 655 -ஐ ஒப்பிடும் பொழுது ஒவ்வொரு வாரமும் வழக்குகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்படுவதை காணமுடிகிறது.

தற்பொழுது ஒன்டாரியோ மாகாணத்தின் இறப்பு எண்ணிக்கை 9688 ஆக உள்ளது என்ற சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. சுமார் 5747 covid-19 வழக்குகள் ஒன்டாரியோ முழுவதும் செயலில் உள்ளதாக தரவுகள் கூறுகின்றன