கேலிக்கூத்தான கனடாவின் கொரோனா தடுப்பு மருந்து! மனம் வருந்தி பதிவிட்ட அரசியல் பிரமுகர்!

rich-coleman
Former B.C. politician Rich Coleman is under fire after a Twitter joke about the efficacy of the COVID-19 vaccine fell flat. CP

கனடாவில், பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உயர் பதவியில் வகித்து வந்த லிபரல் கட்சி முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் கொரோனா தடுப்பூசி எதிர்ப்பு திறன் குறித்து சர்ச்சையான பதிவை வெளியிட்டிருந்தார்.

கொரோனா தடுப்பூசி கட்டுப்பாட்டுக்கு எதிரான குழுக்களில் பிரபலமான ஒரு கேலிக் குறிப்பினை ட்வீட் செய்த பின்னர், அதற்காக வருந்துகிறேன் என்று கூறினார்.

தடுப்பூசியின் திறனை கேலி செய்த அந்த பதிவில், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ரிச் கோல்மேன் (Rich Coleman ) ஒரு படத்தை ட்வீட் செய்துள்ளார்.

அதில், தடுப்பூசிகள் செயல்படுகின்றனவா என்பது எங்களுக்கு எப்படித் தெரியும்? உயிர்வாழும் விகிதம் 99.5% முதல் 99.7% வரை செல்லுமா? என்று பதிவிட்டிருந்தார்.

உடனே அந்த ட்வீட் சமூகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து கோல்மன் விரைவாக ட்வீட்டை நீக்கினார்.

பிறகு வருத்தம் தெரிவித்து வெளியிட்ட பதிவில், நான் முன்பு ஒன்றை ட்வீட் செய்தேன்.  அது வேடிக்கையானது அல்ல என்று நினைத்தேன். அது என் தவறு. எல்லோரும் மன்னிக்கவும் என்று கூறியிருந்தார்.

இதையும் படியுங்க: கொரோனா தடுப்பூசி போடுவதில் பின்தங்கிய கனடாவின் முக்கிய மாகாணம்!

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.