ஒன்டாரியோ மாகாணத்தில் covid-19 வைரஸ் தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது!

Canada

ஒன்டாரியோ மாகாணத்தில் covid-19 வைரஸ் தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருவதாக மாகாண அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மார்ச் மாதத்திலிருந்து பதிவாகி வரும் தொற்று பாதிப்பு எண்ணிக்கைகளில் இதுவே குறைந்த எண்ணிக்கை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் ஒரு வாரத்திற்கான பாதிப்புகள் எண்ணிக்கையில் சராசரி ஆனது மூவாயிரத்திற்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது என்று அறிவித்துள்ளனர்.

ஒன்டாரியோ மாகாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஏறத்தாழ 28 ஆயிரத்து 109 பேருக்கு covid-19 பரிசோதனை எடுக்கப்பட்டதாகவும் அவற்றில் 8.5 சதவீதம் பேருக்கு நேர்மறையான முடிவுகள் வந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம் இந்த சதவீதம் ஆனது 9.1 சதவீதம் ஆக இருந்தது என்று குறிப்பிட்டு உள்ளனர்.

எனவே கடந்த வாரத்தோடு ஒப்பிடும் பொழுது இந்த வாரம் நேர்மறையான முடிவுகள் குறைந்துள்ளது என்பதை அறிய முடிகிறது.

கனடாவின் பல்வேறு மாகாணங்களிலும் covid-19 வைரஸ் தொற்றின் தினசரி பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் புள்ளிவிவர தகவல்கள் கூறுகின்றன.

ஒன்ராரியோ மாகாணத்தில் 802 பேர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.