கனடாவில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட Quebec மாகாணம்! புதிய கடுமையான கட்டுப்பாடுகள் மீண்டும் அறிமுகம்!

Quebec
montreal quebec city highest alert level

Quebec : கனடாவில் கொரோனா தொற்று நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கியூபெக் மாகாணத்தின் மூன்று பிராந்தியங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் மீண்டும் அமலுக்கு வந்துள்ளது.

கடந்த சில நாட்களாகவே கனடாவில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கியூபெக் மற்றும் ஒன்ராறியோ மாகாணங்களில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கனடாவில் மீண்டும் கரோனா பரவல் அதிகரித்து வருவதால் மீண்டும் கட்டுப்பாடுகளை அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளது.

மாண்ட்ரீல், கியூபெக் சிட்டி மற்றும் Chaudiere Appalaches ஆகிய மூன்று பிராந்தியங்களில் கொரோனா தொற்று நோய் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான கட்டுப்பாடுகளை மீண்டும் அறிமுகப்படுத்தியது.

இந்த சிவப்பு மண்டலங்களில் அக்டோபர் 1 முதல் 28 நாட்களுக்கு பார்கள், கச்சேரி அரங்குகள், சினிமாக்கள் மற்றும் நூலகங்கள் மூடப்படுவது நடைமுறைக்கு வரும் என்று மாகாண தலைவர் பிராங்கோயிஸ் லெகால்ட் கூறினார்.

உணவகங்களில் பார்சல் மட்டுமே வழங்க அனுமதிக்கப்படும் மற்றும் பள்ளிகளும் தொடர்ந்து செயல்படும் என தெரிவித்துள்ளார். நிலைமை இப்போது மோசமானதாக உள்ளது என்று லெகால்ட் கூறினார்.

முகக் கவசம் அணிவது மற்றும் சமூகக் கூட்டங்களை கட்டுப்படுத்துவது குறித்து தற்போதுள்ள விதிகள் இருந்த போதிலும், கியூபெக் மாகாணத்தில் திங்களன்று 750 புதிய வழக்குகளை பதிவானது.

இதை பொது சுகாதார அதிகாரிகள் தொற்று நோயின் ‘இரண்டாவது அலை’ என்று குறிப்பிட்டனர். இப்போதைக்கு கொரோனா வழக்குகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காணப்படுகிறது.

எதிர்வரும் வாரங்களில் மருத்துவமனையில் சேர்க்கப்படுதல் மற்றும் இறப்புகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்படும்.

கரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் சூழ்நிலையில், இதற்கான தடுப்பு மருந்துகளைக் கண்டறியும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்க: முதல் அலையை விட கொரோனா இரண்டாவது அலை எவ்வளவு மோசமானது? ஒன்ராறியோ முதல்வர் டக் போர்டு எச்சரிக்கை!

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.