கனேடிய நிபுணர் குழு எச்சரிக்கை! புதிய கொரோனா வைரஸ் பரவலால் மூன்றாவது கொரோனா அலைக்கு வாய்ப்பு!

covid19

கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் புதிய திடீர் மாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் வேகமாக பரவிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வகை தொற்றை சரியான வகையில் கட்டுப்படுத்தாவிட்டால், அது கனடாவில் கொரோனா பரவலின் மூன்றாவது அலைக்கு வழிவகுக்கலாம் என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட தரவுகளில்,

புதிய திடீர் மாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை பிப்ரவரி துவக்கத்தில், வாரம் ஒன்றிற்கு 100,000 பேருக்கு 5 என இருந்தது.

இப்போது மார்ச் துவக்கத்தில் 100,000 பேருக்கு 20 என உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், இதற்கு முன்பு பரவிய கொரோனா வைரஸ் தொற்றுக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

இதன் காரணமாக இந்த புதிய திடீர் மாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை சமன் செய்யப்பட்டுள்ளது.

அறிவியல் ஆலோசனைக் குழுவின் இணை தலைவரான Adalsteinn Brown கூறும்போது, ஒன்ராறியோவில் இரண்டு வெவ்வேறு வகை தீவிர தொற்று நோய்கள் காணப்படுகின்றன என்று கூறியுள்ளார்.

அதில் முதலில் தோன்றிய கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்துவிட்டது என்றும், புதிய திடீர் மாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் கட்டுக்குள் வரவில்லை என்றும் கூறியுள்ளார்.