கொரோனா தடுப்பூசி போடுவதில் பின்தங்கிய கனடாவின் முக்கிய மாகாணம்!

Ontario
public health precautions following the confirmed cases of a potentially more transmissable variant of the coronavirus

ஒன்ராறியோவில் முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு பிறகு பெரிய அளவில் முன்னேற்றம் காணப்படவில்லை..

ஒன்றாரியோ மாகாணம் கொரோனா தடுப்பூசியை, மக்கள் அனைவருக்கும் வழங்குவதில் இருந்து  பின்தங்கி இருப்பதாக தரவுகள் தெரிவிக்கிறது.

கனடாவின் எல்லா மாகாணங்களுக்கும் ஃபைசர் தடுப்பூசி வழங்கப்பட்ட நிலையில், மாகாணங்களில் 100,000 பேருக்கு தடுப்பூசி போடப்படும் அளவில், ஒன்றாரியோ கடைசி இடத்தில் உள்ளது என உயிரியல் ஆய்வாளர் ரியான் இம்க்ரண்ட் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள ஒவ்வொரு 100,000 பேருக்கும் 59 பேருக்கு தடுப்பூசி போட்டுள்ளது.

இதுவரை யாரும் தடுப்பூசிகளைப் பெற முடியாத இடங்கள் பட்டியலில் நுனாவுட், வடமேற்கு பிரதேசங்கள் மற்றும் யூகோனுக்கு ஆகியவை இடம்பெற்று  உள்ளது.

ஒன்றாரியோவில் டிசம்பர் 24 ஆம் தேதி  நிலவரப்படி,1 0,756 அளவு கொரோனா தடுப்பூசியை வழங்கியதாக அரசு வலை தளம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் பிரிட்டனில் பரவிவரும் புதுரகக் கொரோனா கிருமி, கனடாவிலுள்ள இருவருக்குப் பரவியுள்ளதாக அங்குள்ள சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட இருவரும் டர்ஹம் நகரத்தைச் சேர்ந்த தம்பதியினர் ஆவர்.  ஆனால் அவர்கள் எங்கும் பயணம் செய்யவில்லை எனக் கூறப்பட்டது.

அதோடு, கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்ட யாருடனும் அவர்களுக்குத் தொடர்பில்லை என்பதும் தெரியவந்துள்ளதாக ஒன்ராறியோ தற்காலிகத் தலைமை மருத்துவ அதிகாரி கூறியுள்ளார்.

தற்போது பாதிக்கப்பட்ட இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மூன்றவதாக இன்னொரு திரிபு கொரோனா வைரஸ் தொற்று ஒட்டாவாவில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் அது குறித்த முழுமையான தகவல் இன்னும் வெளிவரவில்லை.

இதையும் படியுங்க: உலகின் பிற நாடுகளை தொடர்ந்து கனடா மக்களுக்கும் காத்திருந்த அதிர்ச்சி! ஒன்ராறியோவில் உறுதியானது!

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.